For Daily Alerts
Just In
மதுரை "ரிங் ரோடு புழக்கத்திற்கு வந்தது
மதுரை:
மதுரையில் உலக வங்கியின் உதவியுடன் ரூ 48 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய "ரிங் ரோட்டில் புதன்கிழமை முதல் போக்குவரத்துத் தொடங்கியது.
சுமார் 27 கிலோ மீட்டர் உள்ள இந்த ரிங் ரோடு வடக்குப் பகுதியில் மேலூர், தெற்கில் திருமங்கலம் ஆகிய பகுதிகளை இணைக்கும். இது தவிர,அருப்புக்கோட்டை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருநெல்வேலி, ராமேஸ்வரம் சாலைகளையும் இந்த ரிங் ரோடு இணைக்கும்.
ரிங் ரோடு வழியே செல்லும் இரண்டு சக்கர வாகனங்கள் தவிர பிற வாகனங்களுக்கு வரி வசூலிக்கப்படும்.
ரிங் ரோடு துவக்க நிகழ்ச்சி, எந்தவிதமான விழாவும் இல்லாமல் சாதாரண முறையில் துவக்கி வைக்கப்பட்டது.
யு.என்.ஐ.
Story first published: Wednesday, November 1, 2000, 5:30 [IST]