For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வறுமைக்காக பெற்ற குழந்தையை ரூ. 200க்கு விற்ற தந்தை

By Staff
Google Oneindia Tamil News

புவனேஸ்வர்:

ஒரிசா மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி,தங்களது வறுமைக்காக பெற்ற மகனை ரூ. 200க்கு விற்றனர். அந்தக் குழந்தை பிறந்துஒரு மாதமே ஆனதுதான் கொடுமையான அம்சம்.

ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜகன்னாத் சமோனாத்ராய் (32). இவரதுமனைவி சஞ்சு (26). இருவரும் கூலி வேலை செய்து வருபவர்கல். சந்திக்கோல் என்றபகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளாள். அதுதவிர ஒரு மாதத்திற்கு முன்புஇன்னொரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் சஞ்சுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஜகன்னாத்துக்கும் உடல் நலம் சரியில்லை. இதனால் இருவரும்வேலைக்குச் செல்ல முடியவில்லை.

நிதியுதவி செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்தை அணுகினர். ஆனால் வெறும்கையுடனேயே திரும்ப நேரிட்டது.

இந்த நிலையில் ஒரிசாவைத் தாக்கிய புயல் சந்திக்கோல பகுதியிலும் தனதுமுத்திரையை பதித்துச் சென்றது. ஜெகன்னாத் குடும்பமும் ஒரு உடைந்து போன வீட்டில்தஞ்சம் புகுந்தது. சில நாட்கள் இந்த வீட்டில்தான் ஜகன்னாத் குடும்பத்தினர் தங்களதுசிசுக்களுடன் தங்கியிருந்தனர்.

வறுமையில் வாடிய ஜகன்னாத் குடும்பத்தினருக்கு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உணவுஅளித்துஉதவினர். அப்போது கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம், தங்களது வறுமை தீரவேண்டுமானல், இரண்டாவது பிறந்த குழந்தையை விற்பதைத் தவிர வேறுவழியில்லை என்று ஜகன்னாத் கூறியுள்ளார்.

இதையடுத்து ரமேஷ் சிங் என்பவர் குழந்தையை வாங்கிக் கொள்வதாக கூறினார்.ஒப்பந்தம் ஏற்பட்டது. கிராமத்து பெருந்தலைகள் முன்பு ரூ. 200 பணத்தை வாங்கிக்கொண்டு குழந்தையைக் கொடுத்தார் ஜகன்னாத்.

வறுமைக்காக பெற்ற குழந்தையை விற்றது தொடர்பாக ஜகன்னாத் கூறுகையில்,இதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை. உயிர் பிழைக்க வேண்டுமானால்,சாப்பாடு தேவை. அதற்குப் பணம் தேவை. அது எங்களிடம் இல்லை. எனவேதான்மனதைக் கல்லாக்கிக் கொண்டு குழந்தையை விற்றோம் என்றார்.

ஒரிசாவில் கடந்த ஒரு மாதத்தில் குழந்தையை விற்ற 2-வது நபர் ஜகன்னாத் என்பதுகுறிப்பிடத்தக்கது. ஆங்குல் என்ற கிராமத்தில் சமீபத்தில் ஒரு பெண் தனது மகனை ரூ.1000க்கு விற்றார் என்பது நினைவு கூறத்தக்கது.

ஒரிசாவின் மேற்குப் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. ஆனால் மறுபுறத்தில்,கடலோர மாவட்டங்களில் கடந்த ஆண்டு வீசிய புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகள்இன்னும் மறுவாழ்வு பெறாமல் உள்ளன. அந்தப் புயலில் 10,000க்கும் மேற்பட்டோர்இறந்ததை இந்தியர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X