For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொலை நகரமாகும் பெங்களூர்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

பெங்களூரில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 28 கொலைகள் நடந்துள்ளன. இறந்தவர்களில்பெரும்பாலோனோர் முதியவர்கள். இது இங்கு வாழும் மக்களிடையே குறிப்பாக, முதியோர்களிடையே பீதியைஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் ஹனுமந்தராவ் கூறுகையில், இப்போதெல்லாம் தெருக்களில்நடமாடவே பயமாக இருக்கிறது. பத்திரிக்கைகளை எடுத்துக் கொண்டால் தினம் ஒரு முதியோரின் கொலைச்செய்திதான் கண்ணில் படுகிறது என்றார்.

போலீஸ் கமிஷனர் மடியால் இதுகுறித்துக் கூறுகையில், பெங்களூர் நகரில் அக்டோபர் மாதத்தில் மட்டும் 28கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. பெரும் இதுபோன்ற கொலைகள், குடும்பத் தகராறு மற்றும் பக்கத்துவீட்டினர்களிடையே ஏற்படும் சண்டையினால்தான் ஏற்படுகிறது.

இந்த மாதம் நடந்த 28 கொலைகளில் 12 கொலைகள் குடும்பத்துக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்தவை. 8கொலைச் சம்பவங்கள் பக்கத்து வீட்டினர்களிடையே ஏற்பட்ட தகராறினால் நடந்தவை.

இவற்றில் இன்னும் இரண்டு சடலங்கள் இன்னும் அடையாளம் கண்டு பிடிக்கப்படவில்லை. இந்தக் கொலைகளில்5 கொலைகள் மட்டும் தான் குற்றவாளிகளால் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்தக் கொலைச் சம்பவங்களினால் போலீஸார் தங்களது வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை என்று பொருள்இல்லை. பொதுமக்களிடையே பாதுகாப்பை ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு போலீஸாரிடம் நம்பிக்கையைஏற்படுத்துவதும் போலீஸாரின் கடமை. ஒரே மாதத்தில் 28 கொலைகள் நடந்திருப்பது யாரையும் அதிர்ச்சியடையவைக்கும் என்பது உண்மை தான்.

அக்டோபர் மாதம் 5 ம் தேதி விவேக் நகரைச் சேர்ந்த தீபக் என்ற 7 வயது சிறுவன் அடையாளம் தெரியாதகும்பலால் கடத்தப்பட்டான். அவரது பெற்றோர், கடத்தல்காரர்கள் கேட்ட ரூ 4,50,000 ஐக் கொடுக்காததால்அக்கும்பல் அவனைக் கொலை செய்து ஏரி ஒன்றில் வீசியது. அவரது உடல் மீட்கப்பட்டு விட்டது. இந்தச்சம்பவத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அக்டோபர் 12 ம் தேதி 72 வயது முதியவர் ஒருவர் தனது வீட்டில் கழுத்தை நெரித்துக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். 10 நாட்களுக்குப் பிறகு 65 வயது பெண்மணி தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார்.அக்டோபர் 31 ம் தேதி 60 வயது பெண்மணி தனது வீட்டு குளியலறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.அதே நாள் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் தனது வீட்டில் கொலை செய்யப்பட்டார்.

இதைத் தடுப்பதற்காக, பெங்களூரில் வாழும் முதியவர்கள் குறித்து சர்வே எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். பின்னர்முதியவர்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவும் தீர்மானித்துள்ளோம். ஏனெனில் இப்போது, முதிய வயதுகணவன்-மனைவியரின் குழந்தைகள் அனைவரும் வேலை விஷயமாக வேறு ஊர்களில் இருப்பதால்அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு இருப்பதில்லை என்றார் மடியால்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X