For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்த அதிபர் யார்?

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

George W Bush Junior With his Wife
மனைவியுடன் ஜார்ஜ் புஷ்
பில் கிளிண்டன். அமெரிக்க அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாது, உலக அரசியல்வரலாற்றிலும் மறக்க முடியாத ஒரு பெயர்.

அமெரிக்க அதிபராகவும், உலக வல்லரசுகளில் முதன்மையான நாட்டின் அதிபராகவும்இருந்த பில் கிளிண்டன் ஓய்வு பெறுகிறார். அடுத்த அதிபர் யார் என்பதை அமெரிக்கமக்கள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள தேர்தலில் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

துணை அதிபர் அல் கோர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராக இருக்கிறார்.முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மகன், ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஜூனியர் குடியரசுக்கட்சி வேட்பாளராக களத்தில் இருக்கிறார். உப்புக்கு சப்பானி போல மூன்றாவதுவேட்பாளராக கிரீன் பார்ட்டி வேட்பாளர் ரால்ஃப் நாடர் இருக்கிறார்.

Algore
அல் கோர்
இதுவரை இல்லாத அளவு மிகவும் காரசாரமான பிரசாரத்தைக் கண்டது அமெரிக்கா,அல் கோரும், ஜார்ஜ் புஷ்ஷும் தனிப்பட்ட முறையில் தாக்கிக் கொண்டது வரைசென்றது அதிபர் தேர்தலுக்கான பிரசாரம்.

யார் அதிபராக வருவார்கள் என்று உறுதியாக கூற முடியாத அளவுக்கு கோரும்,புஷ்ஷும் மாறி, மாறி, கருத்துக் கணிப்பில் வாக்குகளைப் பெற்று, போட்டியில்விறுவிறுப்பை ஏற்படுத்தினர். இவர்தான் வருவார் என்று இப்போது வரை உறுதியாககூற முடியாத நிலை நிலவுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில், இந்தியர்களும் அடிபட்டார்கள். முதல்முறையாக இந்தியர்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளியை அல் கோரும், ஜார்ஜ்புஷ்ஷும் கொண்டாடினார்கள். இந்தியர்களின் வாக்கு அவர்களுக்கு மிகவும்அத்தியாவசியமானதாகி விட்டதையே இது காட்டியது.

Ralf Nader
ரால்ஃப் நாடர்
யார் வந்தால் அமெரிக்காவுக்கு நலம் என்பதை விட இந்தியாவுக்கு யார் வந்தால்நல்லது என்ற அளவுக்கு போனது விவாதம்.

உலக அளவிலும் யார் அமெரிக்கா அதிபராக வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. அடுத்த அதிபருக்கும், நமக்கும் எப்படி உறவு இருக்கும்,இருக்க வேண்டும்என்று உலக நாடுகள் ஒப்பிட்டுப் பார்க்கத் துவங்கி விட்டன.

இத்தனை களேபரத்துக்கிடையே செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமெரிக்கஅதிபர் தேர்தல் அமெரிக்காவுக்கு எப்படி முக்கியமோ, அதே அளவு இந்தியாவுக்கும்முக்கியமானது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X