For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜார்கண்ட் முதல்வர் மாரண்டி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் முதல்வராக மத்திய சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் பாபுலால் மாரண்டி நியமிக்கப்படுகிறார்.

இதற்கு வசதியாக மாரண்டி தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்கும்படி, ஜனாதிபதிகே.ஆர்.நாராயணனுக்கு, பிரதமர் வாஜ்பாய் பரிந்துரை செய்துள்ளார்.

நவம்பர் 15-ம் தேதி நள்ளிரவு புதிய ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்படுகிறது. ஜார்க்கண்ட் சட்டசபையில், 81 உறுப்பினர்கள் உள்ளனர். பாஜகவுக்கு32 உறுப்பினர்கள் உள்ளனர். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சமதா கட்சிக்கு 5 உறுப்பினர்கள் உள்ளனர். 2 சுயேச்சை எம்.எல்.ஏக்களும் பா.ஜ.க.வுக்குஆதரவு தருவதாக கூறியுள்ளனர்.

இவர்கள் தவிர ஐக்கிய ஜனதா தளம் 3, ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா 12, காங்கிரஸ் 11, ராஷ்டிரிய ஜனதா தளம் 9, கம்யூனிஸ்ட் கட்சி 3, கம்யூனிஸ்ட்கட்சியில் எம்.எல் மற்றும் எம்சிசி தலா 1, யுஜிடிபி 2 ஆகியவை உள்ளன.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பாரதிய ஜனதாக் கட்சிக் கூட்டணிக்கு தற்போது 40 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சியமைக்க 41 இடங்கள் தேவை.

இதற்கிடையே, முதல்வர் பதவி தருகிறோம் என்று கூறிய வாக்குறுதியை தேசிய ஜனநாயகக் கூட்டணி மீறி விட்டதால், மத்தியில் அதற்கு அளித்து வந்தஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் சிபு சோரன் டெல்லியில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இருப்பினும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒரு எம்.பி கூட இல்லாததால் வாஜ்பாய் அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.

அமைச்சராகிறார் உமாபாரதி:

இதற்கிடையே, பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் புதிதாக இரண்டு அமைச்சர்கள் சேர்க்கப்படவுள்ளனர். ஏற்கனவே அமைச்சராக இருந்துராஜினாமா செய்த உமா பாரதி மற்றும் ஜார்க்கன்ட் பிராந்தியத்தைச் சேர்ந்த பழங்குடி இனத்தவரான கரிய முன்டா ஆகியோரின் பெயர்கள்அடிபடுகின்றன.

சமீபத்தில், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜ் நாத் சிங் உத்தரப்பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்துபோக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி காலியாக உள்ளது.

உமா பாரதி விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள சுக்தேவ் சிங்தின்ஷா வேறு துறைக்கு மாற்றப்படுவார் என்றும் தெரிகிறது.

வாஜ்பாய் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த உமா பாரதி கடந்த மார்ச் மாதம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.ஆகஸ்ட் மாதம் தான் அரசியல் வாழ்க்கையிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகப் போவதாக அறிவித்தார்.

வாஜ்பாய், பல தூதர்களை அனுப்பி, உமா பாரதியை தனது அமைச்சரவைக்கு வரும்படி வேண்டுகோள் விடுத்தார். இதற்கிடையே தற்போது உமாபாரதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது. உத்தரப்பிரதேசத்திலுள்ள லோத்ஸ் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்உமாபாரதி.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஓட்டு வங்கி என்று கருதப்படும் லோத்ஸ் இன மக்களின் கணிசமான ஓட்டுக்கள் பாரதிக்குக் கிடைக்கும் என்றும் பாஜகநம்புகிறது. இம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்கும் இந்த இனத்தைச் சேர்ந்தவரே. அவர் பாஜக விலிருந்து பிரிந்து தற்போது தனிக் கட்சித்தொடங்கி விட்டார்.

உத்தரப்பிரதேசத்தில் 2002 ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாக சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் பணிக்காக உமா பாரதியை முழுவதுமாகஉபயோகித்துக் கொள்ள பாரதிய ஜனதா விரும்புகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X