For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

US-flagஅமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் செவ்வாய்க்கிழமைநடக்கிறது.
குடியரசுக் கட்சி சார்பில் ஜார்ஜ் புஷ் ஜூனியரும், ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணைஅதிபர் அல் கோரும் களத்தில் உள்ளனர். ரால்ப் நாடர் மூன்றாவது வேட்பாளராக களத்தில்இருக்கிறார்.

டெக்சாஸ் மாநில ஆளுநராக இருக்கிறார் ஜார்ஜ் புஷ். எனவே தன்னால் அமெரிக்க அரசைசிறந்த முறையில் நிர்வகிக்க முடியும் என்று தனது பிரசாரத்தில் வலியுறுத்தி வந்தார்.அல்கோரும் சளைக்காமல் பதில் பிரசாரம் செய்தார்.

குடித்து விட்டு கார் ஓட்டிய விவகாரம் புஷ்ஷுக்கு சற்றே சரிவைக் கொடுத்தாலும் கூடஅவரது செல்வாக்கு பெருமளவு சரிந்து விடவில்லை.

அதிபர் தேர்தல் மட்டுமல்லாது, செனட், காங்கிரஸ் ஆகிய சபைகளுக்கும் தேர்தல்நடக்கிறது.

புஷ்ஷுக்கும், கோருக்கும் இடையிலான இந்தப் போட்டி, மிகக் கடுமையாக இருக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் தேர்தல் பிரசாரத்தின் போது கடுமையாக மோதிக்கொண்டனர். யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதில் கடும் போட்டி நிலவியது.

கருத்துக் கணிப்புகளின் கடைசி நிலவரப்படி புஷ் கை ஓங்கியுள்ளது. இருப்பினும், கோரும்பக்கத்திலேயே வருகிறார். எனவே, இவர்தான் வெற்றி பெறுவார் என்று உறுதியாகசொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மிக்சிகன், பென்சில்வேனியா, புளோரிடா, மிசெளரி ஆகிய மாநிலங்கள்தான் ஒருவேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கும் மாநிலங்கள் என்று கருதப்படுகிறது. இந்த மாநிலமக்கள் யாருக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதேஎழுந்து விட்டது.

"ஸ்விங் ஓட்டுக்கள் எனப்படும் நடுநிலையாளர்கள் விகிதம் 30 சதவீதமாக இருக்கிறது.எனவே இவர்களது வாக்குகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

சென்னை தூதரகத்தில் சிறப்பு ஏற்பாடுகள்:

அமெரிக்க தேர்தல் முடிவுகளை உடனடியாக அறிந்து கொள்ள வசதியாக சென்னையில்இருக்கும் அமிெர்கக தூதரகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது.

இதுதொடர்பாக சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

செவ்வாய்க்கிழமை நடைபெறும்அதிபர் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், அமெரிக்கமாநிலங்களின் ஆளுநர் தேர்தப் பற்றிய முடிவுகளை உடனடியாக தெரிந்து கொள்ளஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

பல்வேறு மாநிலங்களின் தேர்தல் நிலவரம் குறித்து மக்கள் அறிந்து கொள்ள தகவல்பலகையும் வைக்கபட்டிருக்கும். தேர்தல் பற்றி புத்தகக் கண்காட்சிக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் பற்றி சிறப்பு விவாதங்களும் நடைபெறும்.

தேர்தல் நிலவரம் பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்ள 811 2054, 811 2055 என்றதொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு அறியலாம் என் அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X