For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மழை வேண்டி கழுதைக்குத் திருமணம்

By Staff
Google Oneindia Tamil News

ஆனால், இன்று நாட்டிலே நிலவுகிற சூழ்நிலையின் ஒரு பிரதிபலிப்புதான் - இந்த கிரிக்கெட் சூதாட்டம் என்பதைநாம் மறந்துவிடக் கூடாது. எவ்வகையிலாவது - அது எவ்வளவு தவறான வழியாக இருந்தாலும் - பணம்பண்ணிவிட வேண்டும் என்ற மனோபாவம் இன்று பெரிதாகப் பரவி வருகிறது.

அரசியல்வாதிகள் திருடுகிறார்கள் ; சிலர் சிக்க, பலர் தப்ப - சிக்கியவர்களும், தப்பியவர்களும், சிக்கஇருப்பவர்களும், தலைவர்களாகவே ஏற்கப்படுகிறார்கள்.

அவர்களுடைய அந்தஸ்திற்கு ஒரு பழுதும் நேர்ந்து விடுவதில்லை. அதிகாரிகள் திருடுகிறார்கள் ; பலர் பதவியில்தொடர, சிலர் வழக்குகளைச் சந்திக்க, சிலர் அதைவிட அநியாயமாக தண்டிக்கப்பட, , சிலர் அதைவிடஅநியாயமாக தப்பித்துவிட, ஆளும் கட்சியை நம்பினோர் கைவிடப்படார் என்ற அரசியல் ஆன்மீக உண்மையைஉணர்ந்த அதிகாரிகள், இன்னும் திருடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பல டாக்டர்கள் தங்களுடைய புனிதமான தொழிலை வெறும் வர்த்தகமாக மட்டுமல்ல - பகல் கொள்ளையாகவேமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த டாக்டர்கள் என்ற நோயினால் பீடிக்கப்பட்டு சமூகம்தான் தவிக்கிறதே தவிர,அந்த டாக்டர்களுக்கு அவர்களுடைய மோசடி வியாபாரம் நன்றாகவே நடக்கிறது.

நிதி நிறுவனம் நடத்தியவர்களில் பலர் முகமூடி அணியாத கொள்ளைக் காரர்களாகவே மாறி விட்டனர். நீதித்துறையிலும் கூட ஊழல் என்கிற திருட்டு பரவி விட்டது. இன்று எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல,ஆன்மீகவாதிகள் என்ற பெயரில், முற்றும் துறந்தவர்கள் என்ற வேடமணிந்த சிலர், தர்ம நியாயத்தையும் துறந்து,மோசடி செய்து பணம் குவிக்கிறார்கள்.

இப்படி சமுதாயத்தின் பல அங்கங்களும் இந்த பண நோய்க்கு பலியாகிக் கொண்டிருக்கிற வேளையில் - அந்தநோய் விளையாட்டு மைதானத்தையும் தீண்டியிருப்பதில், வியப்பதற்கு என்ன இருக்கிறது?

இதில் இன்னமும் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், பத்திரிக்கையாளர்களுக்கு பங்கு உண்டா, வேறுவிளையாட்டுகளில் இது மாதிரி எதுவும் நடப்பதில்லையா - என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்போதுதான் உண்மையான வியப்பிற்கு இடம் ஏற்படும்.

தவறுகள் எல்லா சமுதாயங்களிலும் நடக்கத்தான் செய்யும். அவற்றை ஒரு சமுதாயம் எப்படி அணுகுகிறதுஎன்பதைப் பொறுத்துதான், தவறுகள் மலிவதோ அல்லது குறைவதோ நடக்கும்.

மிகப் பெரும்பாலான மனிதர்கள், தண்டனைக்கு பயந்துதான் குற்றங்களைச் செய்யாமல் இருக்கிறார்கள். நமதுசமுதாயத்திலோ, பிரபலஸ்தர்களைக் கண்டால், சட்டம் வழி விட்டு ஒதுங்கி நிற்கும் - என்பது எழுதப்படாதவிதிமுறையாக இருந்து வந்திருக்கிறது.

பிறகு என்ன பயம்?குளிர்விட்டுப் போன சமுதாயமாகி விட்டோம். சட்டத்தின் காற்று பலமாக வீசினால்தான்நமக்கு குளிர் உண்டாகும் ; குற்றங்கள் குறைய அதுதான் வழி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X