For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சபரி மலையில் மண்டல பூஜைகள் ஆரம்பம்

By Staff
Google Oneindia Tamil News

ஆர். சுந்தர பாஸ்கர்

Ayappan மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை புதன்கிழமைதிறக்கப்படுகிறது. ஐயப்பனுக்கு அபிஷேக ஆராதனைகள் வியாழக்கிழமை முதல்நடைபெறும்.

மண்டல பூஜையின் போது 10 நாட்களுக்கு உற்சவம் நடைபெறும். இந்த மாதம் 22-ம் தேதிகொடியேற்றம் நடைபெறுகிறது.

டிசம்பர் மாதம் 1-ம் தேதி ஆறாட்டு விழா நடைபெறும். அன்றைய தினம் கங்கை நதிபோல் புண்ணிய நதியாய் கருதப்படும் பம்பை நதிக்கு ஐயப்பனின் விக்கிரகம் கொண்டுவரப்பட்டு நீராட்டப்படும்.

டிசம்பர் மாதம் 26-ம் தேதி மண்டல பூஜை நிறைவு பெற்றவுடன் அன்று இரவு நடைபூட்டப்படும்.

மகரஜோதி தரிசனத்திற்காக சன்னிதி ஜனவரி 1-ம் தேதியன்று திறக்கப்படும். மகரஜோதிதரிசனம் ஜனவரி மாதம் 14-ம் தேதியன்று நடைபெறும்.

கலியுகக் கடவுளான ஐயப்பன் அன்றைய தினம் ஜோதி வடிவாக பக்தர்களுக்குகாட்சியளிப்பார். சபரிமலை சன்னிதானத்திற்கு நேர் எதிரே இருக்கும் பொன்னம்பல மேடுஎனப்படும் மலையில் உள்ள மூன்று இடங்களில் அகல்விளக்கின் திரி ஜோதிபோல் ஜோதிதோன்றும்.

Ayappan Temples 18 Stepsபொன்னம்பல மேட்டில் மூன்று குழிந்த பகுதிகள் சிறு சிறு இடை வெளி விட்டுகாணப்படும். முதல் குழிந்த பகுதியில் தோன்று ம் ஜோதி நகர்ந்து இரண்டாவது பகுதிக்கும்அங்கிருந்து நகர்ந்து மூன்றாவது பகுதிக்கும் செல்லும். இந்த ஜோதியைக் கண்டால்மோட்சம் கிட்டும் என்று நம்பப்படுகிறது.

ஜோதி தினத்தன்று ஐயப்பன் வசித்து வந்த பந்தனத்திட்டு அரண்மனையிலிருந்துஐயப்பனுக்கு அணிவிக்கும் ஆபரணங்கள் திருஆபரணப் பெட்டியில் கொண்டு வரப்படும்.ஐயப்பன் ராஜகுமாரனாக இருந்ததால் அந்த ஆபரணங்கள் அரண்மனையிலிருந்துகொண்டு வரப்படும்.

ஜோதி தெரிவதற்கு முன்னால் கருடன் பொன்னம்பல மேட்டை வட்டமிட ஆரம்பிக்கும்.அதுவே விரைவில் ஐயப்பன் ஜோதிவடிவில் காட்சியளிக்கப்போகிறான் என்பதற்குகட்டியம் கூறுவது போல் அமையும். பக்தர்கள் உடனே ஜோதி தரிசனத்திற்கு பரவசத்துடன்தயாராவார்கள்.

ஜோதியைக் கண்டதும் ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் விண்ணைப்பிளக்கும். அதே சமயம் ஐயப்பன் சன்னிதானத்தில் சிறப்பு மங்கல ஆரத்தி நடைபெறும்.

Ayappan Devotees18-ம் படி ஐயப்பனை தரிசிக்க விரதங்கள் மேற் கொள்ள வேண்டும். சபரிமலை செல்லும்பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ம் தேதி மாலை அணிந்து மலைக்கு செல்வார்கள். மலைக்குசெல்ல ஒரு மண்டல விரதம் இருக்க வேண்டும், ஒரு மண்டலம் என்பது48 நாட்களாகும்.

மாலை அணியும் நாள் முதல் விரதம் இருக்க வேண்டும். துளசி மாலையிலோ. ஸ்படிகமாலையையோ, ருத்திராட்ச மாலையையோ அல்லது பவள மாலையையோ கழுத்தில்ஐயப்பன் டாலருடன் அணிந்து கொள்வர்.

இந்த மாலையை குருசாமி ஏதாவது ஒரு திருத்தலத்தில் அணிவிப்பார். குருசாமி என்பவர்18 வருடங்கள் சபரி மலைக்கு சென்று வந்தவராவார். அவர்கள் மட்டுமே மற்றபக்தர்களுக்கு மாலை அணிவிக்க முடியும்.

முதல் முறை சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் கன்னி சாமி என அழைக்கப்படுவார்கள்.மாலை அணிந்து செல்லும் அனைவருமே சாமி என அழைக்கப்படுவர்.

Ayappan Devoteesஐயப்பன் பந்தள அரண்மனையில் வாழ்ந்து வந்ததால் பந்தள மகாராஜா மட்டுமே எந்தவிரதமும் இல்லாமல் மலைக்கு வந்து செல்ல முடியும்.

வருடாவருடம் பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஜாதி மத பேதமின்றி சபரிகிரிவாசனைதரிசிக்க வருகிறார்கள் அதிலும் அங்கு வரும் பக்தர்களில் தமிழர்களின் எண்ணிக்கை தான்மிக அதிகம்.

ஐயப்பன் தமிழ் கடவுள்தான். பழங்கால தமிழர் வணங்கிய ஐயனார் என்கிற காவல்தெய்வம்தான் ஐயப்பன் என கூறப்படுகிறது. சபரிமலை கேரளாவில் அமைந்திருந்தாலும்அங்கு தமிழ் பக்தர்கள்தான் அதிகம்.

18 படிகளை மிதித்தால் நாம் செய்த பாவம் அனைத்தும் போகும். ஐயனை தரிசித்தால்மோட்சம் கிட்டும். அருள் தரும் அன்பான ஐயப்பனை சந்தித்து அனைத்துஐஸ்வர்யங்களும் பெறுவோம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X