For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்ச் வளைகுடாவில் ஒரு உயிர்ப் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

பூஜ் (கட்ச்-குஜராத்):

குஜராத் மாநிலம் கட்ச் வளைகுடாப் பகுதியில் விபத்துக்குள்ளான விமானப் படையின்எம்.ஐ-8 ரக ஹெலிகாப்டரில் இருந்த சிலர் மிகுந்த போராட்டத்திற்கிடையே உயிர்தப்பியது தெரிய வந்துள்ளது.

கடுமையான பயிற்சி கொடுத்த மன உறுதி, தைரியம் ஆகியவையே உயிர் தப்பிய இந்தவீரர்களுக்கு தப்பிக்க வேண்டும் என்ற துணிவைக் கொடுத்துள்ளது.

கட்ச் வளைகுடாவிலுள்ள ரான் பகுதியில் நவம்பர் 12-ம் தேதி இந்த ஹெலிகாப்டர்காணாமல் போனது. பாகிஸ்தானால் சுடப்பட்டிருக்கலாம் என்று முதலில்கருதப்பட்டது. காரணம், இங்கிருந்து மிக குறுகிய தூரத்தில்தான் பாகிஸ்தான் எல்லைஉள்ளது.

காணாமல் போன ஹெலிகாப்டரைத் தேடும் பணியை மிகவும் தாமதமாகவே ராணுவம்துவங்கியதாக உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்குள் 2 வீரர்கள்சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்திருந்தனர்.

மீட்புப் பணிகள் தாமதமாகவே, ஒவ்வொரு வீரராக உயிரிழந்து வந்தனர். உடனடியாகஇறந்த 2 வீரர்களுக்குப் பிறகு, படிப்படியாக 5 வீரர்கள் இறந்தனர். உயிரைக் கையில்பிடித்தபடி தவித்துக் கொண்டிருந்த பிற வீரர்களுக்குத் தங்களது சக வீரர்கள் உயிரைவிட்டது கண்களை நீரால் அடைத்தது.

சர் கிரீக் பகுதியில் உள்ள புதை குழிப் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்தஹெலிகாப்டர் விழுந்தது. முதலில் ஏதோ ஒரு பொருள் ஹெலிகாப்டர் மீதுமோதியதாகத் தெரிகிறது. அதன் பிறகு ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது.

அரைகுறை உயிருடன் பரிதவித்துக் கொண்டிருந்த வீரர்கள், மீட்புப் படையினர்விரைவாக வந்து தங்களைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர்.

தொண்டை வறண்டு போனபோது, தங்கள் வசம் இருந்த குறைந்த அளவிலான குடிநீர்வீணாகிப் போய் விடக் கூடாது என்பதால், சக வீரர்களின் சிறுநீரை அருந்தினர்.ஒவ்வொரு வீரரும் உடலில் சத்திழந்து இறந்து கொண்டிருந்த நிலையிலும் பிறவீரர்கள்மிகுந்த நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருந்தனர்.

விபத்து நடந்த 25 மணி நேரம் கழித்தே அவர்களைத் தேடி மீட்புப் படையினர்வந்தனர். அதற்குள் ஒரு பகலும், இரவும் முடிந்து விட்டது. 7 வீரம் நிறைந்த உயிர்கள்பறிபோய் விட்டன.

பாலைவனம் போல அல்லாது, ரான் பகுதி மிக நெடிய தரிசு நிலப் பகுதி. முற்றிலும்கடுமையான மணல், நீர், சேறு, புதைகுழிகள், கடல் நீர் ஆகியவை கலந்த ஒருகடுமையான பகுதிதான் ரான்.

வெயில் அடிக்கும்போது, ரான் பகுதியில் 55 டிகிரி வெயில் இருக்கும். அந்த வெயிலில்சாதாரண மனிதர்கள் உருகி விடுவார்கள். அதேபோல, நீர்ப்பதம் அதிகரித்து விட்டால்,ராட்சச ஆக்டோபஸ் போல அந்தப் பிராந்தியம் மாறி விடும். மொத்தத்தில், அந்தப்பகுதியில் சிக்கும் நபர், மெதுவாக உயிரை விட வேண்டியதுதான்.

இந்தப் பகுதியில்தான் எம்.ஐ.-8 ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி விழுந்தது.ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதும் அதிலிருந்த வீரர்கள் மயக்கமடைந்துவிட்டனர். சிலர் படுகாயமடைந்தனர். முதலில் விழித்தவர் ஜூனியர் வாரண்ட் ஆபிசர்எஸ்.கே.மொகந்திதான். கண் விழித்துப் பார்த்தபோது, சுற்றிலும் வீரர்கள் காயத்துடன்கிடந்ததைக் கண்டார் மொகந்தி.

உடனடியாக தைரியத்தையும், உடலில் சக்தியையும் வரவழைத்துக் கொண்டு, சேற்றுப்பகுதியில் சிக்கிக் கிடந்த வீரர்களை ஒவ்வொருவராக இழுத்து மணல் பகுதியில்கொண்டு வந்து போட்டார். ஆனால், ஏற்கனவே காயமடைந்திருந்த வீரர்களுக்குமணல், நெருப்பாக கொதித்தது. உடலே எரிவது போல அவர்கள் உணர்ந்தார்கள்.ஆனால் வேறு வழியில்லையே?

நேரம் போகப் போக, பசி, தாகம், காயம் என ஒவ்வொரு துயரமாக அவர்களைவாட்டியது. உதவி வரும், உதவி வரும் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதவித்தனர். ஆனாலும் மனதில் உறுதியை விடவில்லை.

இந்த பயங்கர அனுபவத்திலிருந்து தப்பியவர்களில் ஒருவரான எல்லைப் பாதுகாப்புப்படை இணை கமாண்டன்ட் ஸ்வர்ண சிங் ராணுவ மருத்துவமனையில்செய்தியாளர்களிடம் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை 1 மணியளவில் ஹெலிகாப்டர்விபத்துக்குள்ளானது. நாங்கள் விழுந்த இடம், லாக்பாட் என்ற இடத்திற்குஅருகேயுள்ள கிரீக் பகுதியாகும்.

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதும், முன்பக்கத்தில் அமர்ந்திருந்த எல்லைப்பாதுகாப்புப் படை இணை ஐ.ஜி யாதவ், 2 பைலட்டுகள், ஸ்குவாட்ரன் லீடர்கள் அனில்சர்மா, பதன் ஆகியோர் உடனடியாக உயிரிழந்தனர்.

சில வீரர்கள் காயமடைந்தனர். சில வீரர்களுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை.9 பேர் உயிர் பிழைத்தோம். இருப்பினும் செளஹான் என்பவர் சிறிது சிறிதாக துடித்துஇறந்தார். அவருக்கு அடுத்து எல்லைப் பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் திலீப்மொஷராய் இறந்தார். செளஹானுக்குப் பிறகு அவர் இறந்தார்.

அன்று நள்ளிரவு ஒரு மீட்பு ஹெலிகாப்டர் அப்பகுதியில் வந்தது. அதைப் பார்த்துகைகளில் இருந்த டார்ச்களைக் காட்டினோம், ஆனால் எங்களது முயற்சிதோல்வியுற்றது. அடுத்த நாள் காலை 8 மணிக்கு 2 ஹெலிகாப்டர்கள் வந்தன.ஆனாலும் எங்களை அவர்களால் கண்டுபடிக்க முடியவில்லை.

திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சுபேதார் சதிலால் இறந்தார். அவருக்கு அடுத்துஎல்லைப் பாதுகாப்புப் படை கமாண்டன்ட் வி.ஆர்.கே. நாயர் இறந்தார். இப்போது 5பேர் மட்டுமே மிஞ்சினோம்.

திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மேல் நான்காவது ஹெலிகாப்டர் அங்கு வந்தது.எங்களை அடையாளம் கண்டது. ஆனால் தரையிறங்க வசதியே இல்லை. இதையடுத்துமேலிருந்து கயிறுகளை கீழே போட்டனர். அதன் மூலம் நாங்கள் மேலே ஏறி வந்தோம்.

விமானப்படையைச் சேர்ந்த சேர்ந்த பிளையிங் ஆபிசர் மனீஷ் குமார், ஜூனியர்வாரண்ட் ஆபிசர் மொகந்தி, எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஸ்வர்ண சிங்,உன்னி, பிரேம் சிங் ஆகியோர் உயிர் தப்பினர். பின்னர் அனைவரும் பூஜ் ராணுவமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் எங்கே?

இதற்கிடையே, ஹெலிகாப்டரில் இருந்த காக்பிக் வாய்ஸ் ரெக்கார்டரைத் தேடும்பணியில் இந்திய விமானப்படை தீவிரமாக உள்ளது.

பெரிய சகதிப் பரப்பான ரான் பகுதியில் ஹெலிகாப்டரின் சிதறிய பாகங்கள் விரவிக்கிடக்கின்றன. எனவே மிகுந்த சிரமப்பட்டுத்தான் அதைக் கண்டுபிடிக்க முடியும் என்றுவிமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X