For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலு ஜூவல்லர்ஸ் கடை மீண்டும் திறப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நிதி நெருக்கடியால் இழுத்து மூடப்பட்ட பாலு ஜூவல்லர்ஸ் நகை ஷோரூம் புதிய பொலிவோடு மீண்டும் புதன்கிழமை திறக்கப்படுகிறது.

நகைக் கடையோடு, சீட்டு கம்பெனியும் வைத்து நடத்தியவர் பாலு. இவரது கடையில் அரசியல் பலம் வாய்ந்த இரு பெண்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ளநகைகளை வாங்கிக் கொண்டு பணத்தைத் தரவில்லை.

இதனால், பெரும் நஷ்டத்தில் விழுந்தது இந்த நிறுவனம். சீட்டுப் பணம் கட்டியவர்களுக்கு பணமோ, நகையோ கொடுக்க முடியவில்லை. பாலுநோய்வாய்ப்பட்டு இறந்தார். கடை மூடப்பட்டது. சீல் வைக்கப்பட்டது. கடை மீது வழக்குகள் தொடரப்பட்டன.

இவரது மகன் பாலு ஐயப்பன் இப்போது பெரும் பாடு இப்போது கடையை திறக்கிறார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பாலு ஜூவல்லர்ஸ் ஷோரூம் 29-ம் தேதி காலை புதிய மெருகுடன் மீண்டும் துவக்கப் படுகிறது. இதில் முதல் கட்டமாக ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க,வைர, வெள்ளி நகைகள் விற்பனைக்கு வைக்கப்படும். சர்வதேசத் தரம் கொண்டஇந்த நகைகள் அறிமுகத் திட்டமாக செய் கூலி இன்றி விற்கப்படும்.

துவக்க விழாவில் தமிழக அமைச்சர் ஆலடி அருணா, சினிமா பாடலாசிரியர் வைரமுத்து, நடிகை தேவயானி, மலேசிய முன்னாள் துணை நிதியமைச்சர் டத்தோவாங்சீவா, வங்க தேசத்தின் சார்பில் பினாங்கில் கவுரவத் தூதராக இருக்கும் டத்தோ ஹாஜி ஷேக் அலாவூதின், அகேட் குரூப் தொழில் நிறுவனங்களின் தலைவர்சுல்தான் அப்துல்காதிர் இயக்குனர் எஸ்.நைனா கமது ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

பாலு ஐய்யப்பன் விழா ஏற்பாடுகளில் முன்னிலை வகிப்பார். ஷோரூம் மூலமாக கிடைக்கும் லாபத்தை வைத்துச் சிறுகச் சிறுக டிபாசிட் தாரர்களுக்கு உரியபணம் திருப்பித் தரப்படும்.

கடன் கழியும் வரை இந்த ஷோரூம் வருமானம் வேறு எந்த பணிக்கும் திருப்பி விடப்பட மாட்டாது. இதன் மூலமாக பாலு ஜூவல்லர்ஸ் டிபாசிட் தாரர்கள்14 ஆயிரம் பேருக்கும் கடன் திருப்பிச் செலுத்திட உத்தரவாதம் அளிக்கப்படுகிறது என்றார்.

பேட்டியின் போது, இந்த ஷோரூமில் நகை முதலீடு செய்துள்ள சுல்தான் அப்துல்காதிர், அவரின் மகன் நைனாமுகமது இவர்களின் அகேட் குரூப் நிறுவனங்களின்இந்தியக் கிளைத் தலைவர் முன்னாள் டி.ஜி.பி.யான துரைராஜ், பாலு ஜூவல்லர்ஸ் டிபாஸிட் தாரர்கள் சங்கத் தலைவர் தனசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X