For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா - ஜிம்பாப்வே முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா வெற்றி

By Staff
Google Oneindia Tamil News

கட்டாக்:

இந்தியா - ஜிம்பாப்வேக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி சனிக்கிழமை நடந்தது. இந்த போட்டியில் இந்தியா மூன்று விக்கெட் வித்தியாசத்தில்ஜிம்பாப்வேயை வென்றது.

இந்தியா - ஜிம்பாப்வேக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் முதல் போட்டி கட்டாக்கில் இருக்கும் பாராபதி விளையாட்டுஅரங்கில் சனக்கிழமை நடந்தது. பரபரப்பாக நடந்த போட்டியில் இந்தியா ஜிம்பாப்வேயை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே முதலில் பேட் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. முதல் விக்கெட்டை சீக்கிரமே பறி கொடுத் ஜிம்பாப்வே பின்நிதானித்து ஆடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது.

ஜிம்பாப்வே தரப்பில் கார்லிஸ் சிறப்பாக ஆடி 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். துவக்க ஆட்டக்காரர் 69 ரன்கள் எடுத்தார்.

இந்திய தரப்பில் ஜாகீர் கான் 10 ஒவர்களில் 46 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

வெங்கடேஷ் பிரசாத் 10 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றினார்.அஜீத் அகார்கர் 10 ஓவர்களில் 74 ரன்கள் கொடுத்து 2விக்கெட்டை கைப்பற்றினார். சச்சின் டெண்டுல்கர் 4 ஒவர்களில் 21 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

இதன்பின் 50ஓவர்களில் 254 ரன்கள் என்பதை இலக்காக கொண்டு இந்தியா களமிறங்கியது. அணித் தலைவர் கங்குலியும், டெண்டுல்கரும் துவக்கஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

துவக்கம் முதலே இருவரும் சிறப்பாக ஆடினர். 44 ரன்கள் எடுத்த நிலையில் டெண்டுல்கர் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 102. இவரைத்தொடர்ந்து கங்குலியும் 44 ரன்களை எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

அதன் பின் விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்தன. 114 ரன்கள் எடுத்திருந்த போது இந்தியா முக்கியமான 5 விக்கெட்டுகளை இழந்து மோசமானநிலையில் இருந்தது. ஆனால் இளம் ஆட்டக்காரர் ஹேமந்த் பதானி சிறப்பாக ஆடினார். அவர் சிறப்பாக ஆடி 69 பந்துகளில் 58ரன்கள் எடுத்தார்.

விஜய் தாஹியா 35 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். அஜீத் அகார்கர் 16 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார்.

இந்தியா 47.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியா ஜிம்பாப்வேயை 3விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஜிம்பாப்வே தரப்பில் ஒலோங்கோ 10 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இன்றைய ஆட்டத்தில் சிறந்தஆட்டக்காரராக ஹேமந்த் பதானி தேர்ந்தெடுக்கப்பட்டார். டெஸ்ட் மேட்சில் சதம் அடித்ததற்காக ஷிவ சுந்தர் தாசுக்கு சிறப்பு பரிசாக ரூ 1 லட்சம்பரிசளிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X