For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீலகிரியில் மலையில் வீரப்பன்?

By Staff
Google Oneindia Tamil News

ஊட்டி:

நீலகிரி மலைப்பகுதியில் வீரப்பன் கூட்டாளி நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு அதிரடிப்படையினர்குவிக்கப்பட்டுள்ளனர்.

எல்லைப் பாதுகாப்பு படை, அதிரடிப்படையினர் சத்திக் காட்டுப் பகுதியில் முகாமிட்டுள்ளனர். இந்த முகாம்களினால், வீரப்பன்கூட்டாளிகள் இடம் பெயரத் தொடங்கியிருக்கலாம் எனக் கருதப்பட்டது. குறிப்பாக இவர்கள் நீலகிரி மலைப் பகுதிக்குச் சென்றுஅங்கிருந்து கேரளாவிற்குள் செல்லும் வாய்ப்பு உள்ளதாக உளவுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதை நிரூபிக்கும் வகையில் மாயார் வனப் பகுதியில் சிலர் துப்பாக்கியுடன் நடமாடியதாக அங்குள்ள மலைவாசிகள்தெரிவித்தனர். இதையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

அதிரடிப்படையினர் நீலகிரி மலைப் பகுதிகளில், தெங்குமரஹாடா, மாயார், சிறியாறு, பந்திப்பூர் ஆகிய இடங்களில்குவிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

மாதேஸ்வரன் மலையில் முற்றுகை:

இதறகிடையே, எல்லைப் பாதுகாப்பு படையின் 117 வது படைப் பிரிவு மாதேஸ்வரன் மலையில் முகாமிட்டது. மற்றொரு படைபண்ணாரி மாரியம்மன் கோயில் அருகே முகாமிட்டுள்ளது.

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க எல்லைப் பாதுகாப்பு பிரிவின் 117 வது பிரிவு சத்திய மங்கலம் காட்டிற்கு வந்து சேர்ந்தது.முதல் கட்டமாக 4 கம்பெனிகள் சத்திய மங்கலம் காட்டிற்கு வந்து சேர்ந்தது. இந்த கம்பெனிகள் தற்போது இங்கு முகாமிடத்தொடங்கியுள்ளனர்.

கர்நாடக அதிரடிப்படை டி.ஐ.ஜி., ஹர்ஷவர்த்தன் ராஜூ தலைமையிலான எல்லைப் பாதுகாப்பு படை மாதேஸ்வரன் மலையில்முகாமிட்டுள்ளது.

பண்ணாரியில் 127 படை வீரர்கள் அடங்கிய பிரிவு மாரியம்மன் கோயில் பகுதியில் முகாமிட்டுள்ளது. இங்குமுகாமிட்டதையடுத்து பண்ணாரி கோயிலுக்கு வரும் பக்தர்கள், சற்று அச்சத்துடன் அந்தப் பகுதியில் ஓய்வு எடுக்காமல்திரும்புகின்றனர். அதிரடிப்படை முகாம்களினால் காட்டுப் பகுதி ஒரு ராணுவத் தளமாக காட்சியளிக்கிறது.

அதிரடிப்படையினர் கொளத்தூர் பகுதியையும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இங்கு 3 முறை தேடுதல் வேட்டையைநடத்தியுள்ளனர். ஏழரை மத்திக்காடு, தாள மடுவு, கண்ணமுச்சி, கொமராயனூர், தண்டா கேட் ஆகிய இ டங்களில் தீவிரசோதனை நடத்தப்பட்டது. வீரப்பனின் ஆதரவாளர்கள் இந்த வழியாக காட்டுக்குள் செல்லலாம் என்ற எதிர்பார்ப்பில் இந்தவீரர்கள் இப்பகுதியை முற்றுகையிட்டு வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X