For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தான் தூதரக அதிகாரியை வெளியேற்றியது வங்கதேசம்

By Staff
Google Oneindia Tamil News

டாக்கா:

பாகிஸ்தானுடன் 26 வருடங்களாக தூதரக உறவு கொண்டுள்ள வங்க தேசம், முதல்முறையாக பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவரை நாட்டிலிருந்து வெளியேறஉத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் தூதரகத்தில் துணை கமிஷனராக இருக்கும் இர்பானுர் ரஹ்மான் ராஜாவைவெளியேற்றும் முடிவை, பாகிஸ்தான் தூதர் இக்பால் அகமது கானிடம், வங்கதேசவெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் ஆசாத் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்புதான், ராஜாவை, பாகிஸ்தான் அரசு, தனது நாட்டுக்குத்திரும்ப அழைத்திருந்தது. வங்கதேச வெளியுறவு செயலாளராக தற்காலிக பொறுப்புவகித்துவரும் டாவிக் அலி பாகிஸ்தான் அதிகாரியிடம் வங்க தேசத்தின் முடிவைவெள்ளிக்கிழமை தெரிவித்ததோடு, ராஜா வெள்ளிக்கிழமையே வங்க தேசத்தை விட்டுவெளியேற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

வங்கதேச விடுதலைப் போராட்டத்தின்போது நடந்த வன்முறைக்கு தற்போதைய வங்கதேச ஆளும் அவாமி லீக் கட்சியே காரணம் எனவும், அப்போது நடத்தசம்பவங்களுக்கு பாகிஸ்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அவசியமில்லைஎனவும் கூறியிருந்தார்.

அதற்கு வங்க தேசம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிர்ப்புகள்கிளம்பியதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் 30-ம் தேதி ராஜாவை பாகிஸ்தான் திரும்பவருமாறு அழைத்தது.

ராஜா வெளியேற்றம் குறித்து வங்க தேச வெளியுறவுத்துறை அமைச்சகம்தெரிவிக்கையில், ராஜா வங்க தேசத்தை அவமானமாக பேசிய பிறகு பாகிஸ்தான் அரசுஏதேனும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எந்த விதநடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மேலும் இங்கு இருந்தால் இரு நாடுகளுக்கும்இடையே உள்ள உறவு பாதிக்கப்படலாம் என்பதால்தான் அவர்வெளியேற்றப்படுகிறார்.

வங்க தேசம் பாகிஸ்தான் உட்பட தெற்காசிய நாடுகளுடன் நட்புறவையேவிரும்புகிறது என தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சமத் ஆசாத் கூறுகையில், இரு நாடுகளுக்கும்இடையேயான நட்புறவு நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. அதிபப் ஷேக் ஹசீனா அமைதியை விரும்புகிறார்.

வங்க தேச அரசு இந்த முடிவை எடுக்கும் நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. எந்தஒரு விஷயத்திற்கும் ஓர் எல்லை உண்டு. நாங்கள் அதிக பட்ச பொறுமையைகடைபிடித்தோம். ஆனால் எங்கள் பொறுமைக்கு பாகிஸ்தானிடமிருந்து சாதகமானபதில் எதுவும் கிடைக்கவில்லை என கூறினார்.

இதற்கிடையே, வங்க தேச சுதந்திர போரை எதிர்த்த அமைப்புகளுடன் ராஜா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X