For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இப்போதைக்கு நான் சாக மாட்டேன்

By Staff
Google Oneindia Tamil News

ஹவானா:

Fidel Castroஎதிரிகளின் எதிர்பார்ப்புக்கேற்ப எனது மரணம் இருக்காது என்று கூறியுள்ளார் கியூபஅதிபர் பிடல் காஸ்ட்ரோ.

74 வயதாகும் பிடல் காஸ்ட்ரோ, வயதுகேற்றபடி இல்லாமல், இன்னும் சுறுசுறுப்புடன்வலம் வருகிறார். 1959-ம் ஆண்டு நடந்த புரட்சிக்குப் பின் கியூப அதிபர் பதவிக்குவந்தார் காஸ்ட்ரோ. உலகில் உள்ள கம்யூனிசத் தோழர்களில் மூத்த தோழராககருதப்படுபவர்.

காஸ்ட்ரோவுக்கும், அமெரிக்காவுக்கும் உள்ள பகை உலகறிந்தது. இவரைக் கொல்லநடந்த பல முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. 9 அமெரிக்க அதிபர்களின்கடும் எதிர்ப்புகளைச் சமாளித்து, கியூபாவை வழி நடத்தி வருகிறார்.

அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் மீறி நாட்டை உயிருடன்வைத்துள்ளார் காஸ்ட்ரோ. நாற்பது வருடங்களாக ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும்காஸ்ட்ரோ தனது மரணம் குறித்துக் கவலைப்பட்டதேயில்லை.

தனக்கு வயதாகி விட்டதாக கூறப்படுவது குறித்து பத்திரிகை ஒன்றில் காஸ்ட்ரோதெரிவிக்கையில், வதந்திகள் குறித்து நான் அக்கறை கொள்ளவில்லை. எனதுஎதிரிகளின் விருப்பத்திற்கேற்ப எனது மரணம் இருக்காது. அவர்களுக்குஎரிச்சலூட்டும் விதத்தில் நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.

எனது ஆரோக்கியம் குறித்து நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். எனவேஎன்னை எதிரிகள் ஏளனமாக நினைத்து விட வேண்டாம்.

கட்டுப்பாடுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டியது எனது கடமை. தினசரிஉடற்பயிற்சி செய்கிறேன். என்னைக் குறித்தும், எனது நாட்டைக் குறித்தும் அதிகஅக்கறை காட்டுகிறேன். எனவே நீண்ட நாட்களுக்கு நான் இந்த பூமியில் இருப்பேன்என்று கூறியுள்ளார் காஸ்ட்ரோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X