For Daily Alerts
Just In
பேராசிரியருக்கு வயது 79 .. கலைஞர் வாழ்த்து
சென்னை:
கல்வி அமைச்சர் அன்பழகனின் 79 வது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை சென்னையில் உள்ள அவரது வீட்டில் கொண்டாடப்பட்டது.
முதல்வர் கருணாநிதி, மேயர் ஸ்டாலின், பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
தனது பிறந்தநாளைக் கேக் வெட்டிக் கொண்டாடிய அவர், அண்ணாசாலையில் உள்ள அண்ணாசமாதி, பெரியார் சிலை ஆகியவற்றுக்குச் சென்று மாலைஅணிவித்தார்.
அமைச்சர் அன்பழகனுக்கு முதல்வர் கருணாநிதி சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். அதற்குப்பின் செவ்வாய்க்கிழமை மாலை அன்பழகன்பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்.
Comments
Story first published: Saturday, May 20, 2000, 5:30 [IST]