For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தந்த திருடர்களைப் பிடிக்க பழங்குடி வலை

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவை மாவட்டம் இந்திரா காந்தி வன விலங்குகள் சரணாலயம் மற்றும் தேசிய பூங்காவில் யானைகளைக்கொன்று, தந்தங்களைக் கொள்ளையடிப்பவர்களைத் தடுப்பதற்காக பழங்குடி இனத்தவர்கள் மூலம் கண்காணிப்புப்பணியை அரசு மேற்கொண்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள காடுகளில் யானைகளைக் கொன்றுதந்தங்களைக் கொள்ளையடிக்கும் கூட்டம் அதிகம். இதனால் காடுகளில் யானைகளின் எண்ணிக்கைகுறைந்ததோடு, சுற்றுச்சூழலுக்கும் பங்கம் ஏற்பட்டது.

இதைத் தடுக்க வனத்துறை புதிய திட்டத்தைத் தீட்டியது. இதையடுத்து இந்திரா காந்தி சரணாலயத்தில், 19 யானைக்கொள்ளைத் தடுப்பு முகாம்களை வனத்துறை அமைத்தது. இந்த முகாம்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப்பணிகளில் வனத்துறையினரோடு, பழங்குடியினரும் ஈடுபட்டுள்ளனர்.

சரணாலயத்தின் வார்டன் உதயன் கூறுகையில், உலகிலேயே சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொண்டபூங்காக்களில் ஒன்று இந்திரா காந்தி சரணாலயம். இங்கு யானைகளைக் கொன்று கொள்ளையடிப்போர்எண்ணிக்கை அதிகம். அதேபோல, சுற்றுச்சூழலுக்குப் பங்கம் ஏற்படும் வகையிலான செயல்களும் அதிகம்.

இதைத் தடுக்க வனக்காவலர்களால் மட்டும் முடியாது, பழங்குடியினர் ஒத்துழைப்பும் தேவை என்றுஉணரப்பட்டது. காரணம், பழங்குடி மக்களுக்கு காடுகள் குறித்து நன்கு தெரியும், குறிப்பாக விலங்குகள் குறித்துஅவர்களுக்கு மட்டுமே நன்கு தெரியும்.

இதையடுத்து பழங்குடி மக்களிடம் யானைக் கொள்ளையர்கள், அவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்துவிளக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு யானைக் கொள்ளையர்களைத் தடுப்பதற்கான பயிற்சிகள்வழங்கப்பட்டன.

பின்னர் காடுகளில் 19 கண்காணிப்பு முகாம்கள் மற்றும் கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்குநல்ல பலன் கிடைத்துள்ளது. மொத்தம் 958 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு உள்ள இந்த காட்டின் 6 சரகங்களில்கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டன.

இதுதவிர அம்புலித்துறை என்ற இடத்தில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு ஒரு வனக்காவலரும், மூன்று பழங்குடியினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காவலில் ஈடுபட்டுள்ள வனதுறையினருக்கு வாக்கி டாக்கிகள் மற்றும் பிற தகவல் தொடர்புக் கருவிகள்கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோல, பழங்குடியினருக்கும், பிற பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் தொடர்புகொள்வதற்கான வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏதாவது பகுதியில் யானைக் கொள்ளையர்கள்நடமாட்டம் இருந்தால் அதை வனத்துறையினருக்கு பழங்குடியினர் தெரிவிப்பார்கள்.

யானைத் தந்தங்கள் திருட்டு தவிர, மரக் கடத்தல், வனச் சொத்துக்கள் திருட்டு போன்றவையும் கூட இப்போதுகுறைந்து விட்டது என்றார் உதயன்.

இந்திரா காந்தி சரணாலயத்தில், பல அரிய வகை தாவர, விலங்கினங்கள் உள்ளன. தமிழ்நாடு மற்றும் கேரளமாநிலங்களில் இந்த சரணாலயம் பரவியுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X