ஜெ. பூஜைக்காக புலி நரபலி?
ஹைதராபாத்:
ஜெயலலிதா நடத்தியகாளி பூஜைக்காகத்தான் ஹைதராபாத் நேரு உயிரியல்பூங்காவிலிருந்த வெள்ளைப் புலி கொல்லப்பட்டதாக அதிர்ச்சியூட்டும தகவல்கள்வந்துள்ளன.
ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில் இருக்கும் நேரு உயிரியல் பூங்காவில் சாகி என்றபெண் புலி சென்ற அக்டோபர் மாதம் கொல்லப்பட்டு அதன் தோல் உரிக்கப்பட்டுகழுத்து அறுக்கப்பட்டு அதன் ரத்தம் பெருமளவு தேங்கிக் கிடந்தது. இந்த சம்பவம்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு காரணமானவர்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில்தற்போது விசேஷ யாகத்திற்கு வெள்ளை புலி ரத்தம் உகந்தது என்ற மூட நம்பிக்கைகாரணமாக சாகி புலி கொல்லப்பட்டது எனவும், அந்த புலி ஜெயலலிதா நடத்தியபூஜைக்காகத்தான் கொல்லப்பட்டது எனவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாகி புலி கொல்லப்பட்டதற்கு மறுநாள் புலியின் ரத்தம் எடுத்துதச் செல்லப்பட்டுவாராங்கல் மாவட்டத்தில், ஹனுமகொண்டா ஊரில் இருக்கும் பத்ரகாளியம்மன்கோவிலில் பூஜை நடந்துள்ளது. கோவில் நிர்வாகம் பூஜைக்கு அனுமதி மறுத்ததால்பூஜை ரகசியமாக நடந்தது. இந்த பூஜையில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்புமகன் சுதாகரனும் கலந்து கொண்டார் என காளி கோயில் பூசாரி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மீது பல வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது.வழக்குகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் வெள்ளைப் புலியின் ரத்தம் கொண்டுபூஜை செய்ய வேண்டும் என்ற மூட நம்பிக்கை காரணமாக சாகி புலி கொல்லப்பட்டதுஎன ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பூஜை செய்யப்பட்ட கோயிலில் இருந்து ரத்தம் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேகம் ஏதும் தோன்றாமல் இருக்க ரத்தத்துடன் புலியின் தோலும் எடுத்துச்செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீதுஆந்திர போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர். தொடர்ந்து விசாரணையும் நடந்துவருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications