வங்கதேசத்தில் ஆற்றில் மூழ்கி 60 பேர் பலி
தாக்கா:
வங்கதேச மாநிலம் சந்த்பூர் நகரில் மேக்னா ஆற்றில் இரண்டு படகுகள் மோதிக் கொண்டதில் குறைந்தது 60 பேர்இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 200 பேரைக் காணவில்லை.
வியாழக்கிழமை இரவு இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. ராஜோங்ஷி என்ற படகு 400 பயணிகளுடன்ஆற்றில் சென்று கொண்டிருந்தது. தாக்காவிலிருந்து, மதரிபூர் என்ற ஊருக்கு அது சென்று கொண்டிருந்தது.அப்போது உல்காபாத் என்ற படகுடன் அது மோதியது. கடும் பனி மூட்டம் காரணமாக படகுகள் மோதிக்கொண்டதாகத் தெரிகிறது.
மோதிய வேகத்தில், ராஜோங்ஷி படகு ஆற்றில் மூழ்கியது. இதில் 60 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். 200 பேரைக்காணவில்லை. உல்காபாத் படகில் இருந்த யாருக்கும் காயமில்லை.
இதுவரை 58 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களின் உடல்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது.குறைந்தது 100 பேராவது இறந்திருக்கலாம் என்று வங்கதேச தனியார் டி.வி ஒன்றின் செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் சிக்கி படகு வெள்ளிக்கிழமை காலைதான் மீட்கப்பட்டது. இந்த பரிதாபச் சம்பவத்திற்கு பிரதமர் ஷேக்ஹசீனா இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!