For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சரித்திரம் படைக்கத் தயாராகிறார் வால்ஷ்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

Walshஇன்னொரு உலக சாதனை படைக்கத் தயாராகி வருகிறார் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் கர்ட்னி வால்ஷ்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் வால்ஷ், ஏற்கனவே உலகிலேயே அதிக டெஸ்ட்விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை வைத்திருக்கிறார். இப்போது 500 விக்கெட்டுகளை வீழ்த்தஅவர் தயாராகி வருகிறார்.

300 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியல், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிலரே. அந்த நிலையில், 500விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது ஒவ்வொரு வீரருக்கும் கனவு போன்றதே. கனவை நனவாக்கிக் காட்டவால்ஷ் இப்போது தயாராகி வருகிறார்.

நியூசிலாந்து வீரர் ரிச்சர்ட் ஹாட்லி உலகிலேயே முதல் முறையாக அதிக விக்கெட்டுகளை வீழத்தி புதிய சரித்திரம்படைத்தார். 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 431 விக்கெட்டுகளை அவர் எடுத்தார். அவரது சாதனையைஇந்தியாவின் கபில் தேவி பல வருடங்களுக்குப் பிறகு முறியடித்தார். அவரது சாதனை 434.

இவர்களுக்குப் பின்னர் வால்ஷும், பாகிஸ்தானின் வாசிம் அக்ரமும் 400 விக்கெட்டுகளை கடந்து சாதனைப்பட்டியலில் இடம் பிடித்தனர். சாதனைக்குப் பிறகும் வால்ஷ் தனது வேகத்தைக் குறைத்து விடவில்லை. மாறாக,இன்னும் உத்வேகமாக ஆடினார்.

தற்போது 494 விக்கெட்டுகளுக்குச் சொந்தக்காரராகியுள்ள வால்ஷ், 500 விக்கெட்டுகள் என்ற புதிய சாதனைக்கும்சொந்தம் கொண்டாட தயாராகி வருகிறார். அவர 500 விக்கெட்டுகளை வீழ்த்தினால், கிரிக்கெட் உலகின்ஜாம்பவான்கள் வரிசையில் வால்ஷ் இடம் பெறுவார். அவரது உயரத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத நிலை உருவாகும். அப்படியே முயன்றாலும், அதற்குப் பல வருடங்கள் ஆகலாம்.

வால்ஷ், 500 விக்கெட்டுகளை வீழ்த்தினால், அவரது சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இலங்கையின் முத்தையாமுரளீதரன் போன்ற ஒரு சிலருக்கே இருக்கிறது. அப்படியே நடந்தாலும் கூட வால்ஷின் சாதனையை யாராலும்அழித்து விட முடியாது. நிலவுக்கு எத்தனை பேர் இப்போது சென்றாலும், நீல் ஆம்ஸ்டிராங்கின் பெயர் எப்படிமறக்க முடியாதோ, அதேபோன்ற புகழை வால்ஷ் நிச்சயம் பெறுவார்.

15 ஆண்டுகளாக முதல் தரக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் வால்ஷ், இந்த சாதனையைப் படைக்கஎடுத்துக் கொண்ட முயற்சிகள், அசாதாரணமானவை. ஒரு வேகப் பந்துவீச்சாளர் இத்தனை ஆண்டுகள், வயதுக்குப்பிறகும் வேங்கையின் வேகத்தில் இருப்பது நிச்சயம், பெரிய விஷயம்தான். வேறொரு பந்துவீச்சாளராக இருந்தால்இந்நேரம், ஓய்ந்து போயிருப்பார். ஆனால் வால்ஷ் அப்படி இல்லை.

பீல்டிங்கிலும் வால்ஷ் வித்தியாசமானவராகவே இருந்திருக்கிறார். சாதாரணமாக ஒரு பீல்டர், தன்னிடம் வரும்பந்தை, தோள்பட்டைக்கு மேல் எடுத்து எறிவார். ஆனால் வால்ஷ் அப்படி இல்லை. பந்து வீசுவது போலவே,எடுத்து எறிவார். இது சில நேரங்களில் பேட்ஸ்மென்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. வால்ஷுக்கு இது ஒருபலவீனமான பழக்கம்தான். இருப்பினும் கூட இது வால்ஷைப் பாதிக்கவில்லை.

மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் உலகிற்கு எத்தனையோ ஜாம்பவான்களைக் கொடுத்துள்ளது. சர் காரிசோபர்ஸ், லான்ஸ் ஜிப்ஸ், கிளைவ் லாயிட், விவியன் ரிச்சர்ட்ஸ் என இந்தப் பட்டியல் நீளும். இப்போது வால்ஷும்அந்தப் பட்டியலில் இணைகிறார்.

மார்ச் மாதம் மேற்கு இந்தியத் தீவுகளில், தென் ஆப்பிரிக்காவுடன் நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் தனது உலகசாதனையை வால்ஷ் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரித்திரம் படைக்கப் போகும் வால்ஷை நாமும் வாழ்த்துவோம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X