For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனிமேலும் இது நடக்கக் கூடாது

By Staff
Google Oneindia Tamil News

Misapandianஒரு வழியாக கோர்ட்டில் சரணடைந்து விட்டார் மதுரை துணை மேயர் மிசா. பாண்டியன்.

மதுரையைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் ஜெகதீசன் பட்டப் பகலில் தனது அலுவலகததில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வழக்கமான கொலைதான் என்று வரிச்சியூர் செல்வம் என்பவர் போலீஸ் சரண்அடையும் வரை பொதுமக்களுக்கும்,போலீஸாரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

வரிச்சியூர் செல்வம் போலீஸில் கொடுத்த வாக்குமூலம் மதுரையை மட்டுமல்லாது, தமிழகத்தையே பரபரப்பில்ஆழ்த்தியது. மதுரை துணை மேயர் மிசா. பாண்டியன் சொல்லித்தான் இந்தக் கொலையைச் செய்தேன் என்றுசெல்வம் தனது வாக்குமூலத்தில் கூறினார்.

இதையடுத்துவரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட பலருடன், கொலைத் திட்டம் தொடர்பாக மிசா. பாண்டியன்செல்போன் மூலம் பேசியதை போலீஸார் கண்டுபிடித்தனர். கொலைத் திட்டத்தை வகுப்பதற்காக தனது மாநகராட்சிஅலுவலகத்தை பாண்டியன் பயன்படுத்தியதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து மிசா.பாண்டியன் தலைமறைவானார்.

போலீஸார் மிசா. பாண்டியனைத் தேடும் பணியை முடுக்கி விட்டனர். ஆனால் அவர் சிக்கவில்லை. போலீஸாரும்விடவில்லை. கிடுக்கிப் பிடி போட்டு அவரைப் பின் தொடர்ந்தனர். தமிழகத்திற்குள் தலைமறைவாக இருந்த மிசா.பாண்டியன் கர்நாடக மாநிலம் மைசூரிலும் ஒரு இடத்தில் தங்கியிருந்தார்.

மிசா. பாண்டியனுக்கு பல்வேறு உதவிகளைச் செய்ததாக முதலில் 5 பேரை ஜனவரி 15-ம் தேதி போலீஸார் கைதுசெய்தனர். அதற்கு அடுத்த நாளே மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர்கள் மூலம் மிசா. பாண்டியன்இருக்கும் இடத்தை ஓரளவு போலீஸார் ஊகித்தனர். ஆனால் அவர்களிடம் சிக்கும் முன்பே, ஜனவரி 17-ம் தேதிசெங்கல்பட்டு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மிசா. பாண்டியன் சரண் அடைந்தார்.

இப்போதைய கேள்வி, ஒரு வாக்குமூலத்தின் அடிப்படையில் எழுந்த குற்றச்சாட்டுக்குப் பயந்து, பொறுப்பானபதவி வகிக்கும் ஒருவர் இப்படி, ஓடி, ஒளிந்தது அவசியம்தானா?, இதனால் அவர் வகித்து வரும் பதவிக்கு இழுக்குஏற்பட்டுள்ளதே, இது அந்தப் பதவிக்கு பெருமை சேர்ப்பதாகுமா? என்பதுதான்.

புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தால் கூட அதை தவறென்று நிரூபிக்க ஜனநாயக முறையில் பலவழிகள் உள்ளன. ஆனால் அதையெல்லாம், மண்ணில் போட்டு மூடிவிட்டு, அலட்சியமாக, பொறுப்பானபதவியை அவமானப்படுத்தும் விதமாக மிசா. பாண்டியன் ஓடி, ஓளிந்தது, அவருக்கு மட்டுமல்லாது, துணை மேயர்என்ற பாரம்பரியமான பதவிக்கும் தீராத இழுக்கைத் தேடித் தந்து விட்டது.

தொடர்ந்து மூன்று மாநகராட்சிக் கூட்டங்களில் ஒரு கவுன்சிலர் (துணை மேயர் பதவியும் கவுன்சிலர் பதவியாகவேகருதப்படுகிறது) இருந்தால் அவரது பதவி தானாகவே பறி போய் விடும். ஆனால், கொலைக் குற்றவழக்கில்சம்பந்தப்பட்டு, மாநகராட்சி அவையையும் மதிக்காமல், தலைமறைவாக ஓடி ஒளிந்த மிசா. பாண்டியனின்பதவியைப் பறித்திருக்க வேண்டும் என்றுதான் மதுரை மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

மிசா. பாண்டியன் சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இது முதல் முறையல்ல. மதுரையிலுள்ள செளராஷ்டிரா கூட்டுறவுவங்கியைத் தாக்கியது, மேயர் குழந்தைவேலுவுடன் மோதியது, புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரிங் ரோட்டில்கட்டணம் வசூலித்தவரை தாக்கியது என பல சம்பவங்களில் அவரது பெயர் அடிபட்டுள்ளது.

திமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் அவர் மீது இருந்த பல்வேறு புகார்கள் காரணமாககொலைச் சம்பவத்திற்கு முன்புதான் மிசா. பாண்டியன், திமுக மேலிடத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட பின்னர் மிசா. பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்காமல் திமுக மேலிடம்மெளனம் சாதித்ததும், பொதுமக்களால் விமர்சிக்கப்படுகிறது. அவரை கட்சியை விட்டே நிரந்தரமாக நீக்கியிருக்கவேண்டும் என்ற கருத்துத்தான் மதுரை மக்களால் தினசரி விவாதிக்கப்படும் அம்சமாக இருந்தது.

எப்படியோ, சட்டத்தை மதித்து, இப்போதாவது மிசா. பாண்டியன் சரண் அடைந்திருக்கிறாரே என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, பொறுப்பான பதவியில்இருப்பவர்கள் மற்றும் அவர் சார்ந்த கட்சிகளின் பொறுப்பு. அப்போதுதான், மக்களிடம் நல்ல பெயர் ஈட்டமுடியும்.

நல்ல பெயரை வாங்குவது கடினம், ஆனால் கெட்ட பெயரை எடுத்துக் கொள்வது மிக எளிது. இதைத் தெரிந்துகொண்டால், சமூகத்திற்கும், அரசு நிர்வாகத்திற்கும் மிக நல்லது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X