For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"தோடோ தீவிலிருந்து ஒரு தோழர்

By Staff
Google Oneindia Tamil News

Anirudh Jeganathஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் மொரீஷியஸ் பிரதமர் அனிரூத் ஜகன்னாத். இந்தியரானஅனிரூத் ஜெகன்னாத், இந்தியா வருவது இது முதல் முறையல்ல. இருப்பினும் இந்த முறை அவர் இந்தியாவருவதில் ஒரு விசேஷம் உள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம், ஜெகன்னாத்துக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. 20-ம் தேதி சனிக்கிழமைநடக்கும் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் அவருக்கு டாக்டர் பட்டம் தரப்படுகிறது.

"தோடோ தீவு:

Mauritius தென் மேற்கு இந்தியக் கடலில் உள்ள குட்டித் தீவுதான் மொரீஷியஸ். மடகாஸ்கர் தீவுக்கு கிழக்குக் கடற்கரையில்உள்ளது. மாரிஸ் என்று பிரெஞ்சு மொழியில் அழைக்கப்படுகிறது மொரீஷியஸ். மொரீஷியஸ் ஒரே தீவு அல்ல.மொரீஷியஸ், ரோட்ரிக்ஸ், செயின்ட் பிரான்டன், அகலகா ஆகிய தீவுகளை உள்ளடக்கியதுதான் மொரீஷியஸ்.

மொரீஷியஸின் தலைநகர் போர்ட் லூயிஸ். அதிகாரப்பூர்வ மொழி ஆங்கிலம். இருப்பினும் பிரெஞ்சும், கிரியோல்மொழியும் பரவலமாக பேசப்படுகின்றன. மொரீஷியஸ் நாணயத்திற்குப் பெயர் மொரீஷியஸ் ரூபாய்.

மொரீஷியஸ், தோடோ என்ற பறவைக்குப் பெயர் போனது. தீவுகள் முழுவதும் நிறைய முள் மரங்கள்காணப்படும். அவை இப்போது குறைந்து போய் விட்டதால், தோடோ பறவைகளும் குறைந்து போய் விட்டன.

டச்சுக்காரர்கள் இந்தத் தீவுகளில் முன்பு ஆதிக்கம் செலுத்தினர். 1710-ம் ஆண்டு அவர்கள் மொரீஷியஸ் தீவுகளைவிட்டு வெளியேறினர். அதற்கு முன்பாக கரும்பு சாகுபடியை கற்றுக் கொடுத்து விட்டுச் சென்றனர். அதற்குப் பிறகுசர்க்கரை மிகப் பெரிய பயிராக மாறியது.

Mauritius 1721-ம் ஆண்டு பிரான்ஸ், மொரீஷியஸ் தீவுகளைக் கைப்பற்றியது. மடகாஸ்கர், ஆப்பிரிக்காவிலிருந்துஅடிமைகள் கொண்டு வரப்பட்டு மொரீஷியஸ் தீவுகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். கரும்பு சாகுபடியைஅவர்கள் பார்த்துக் கொள்ள அமர்த்தப்பட்டனர்.

பிரான்ஸும், இங்கிலாந்தும், மொரீஷியஸ் தீவுக்காக 1810ம் ஆண்டு கடுமையாக போரிட்டன. இறுதியில்,இங்கிலாந்து வசம் வந்தது மொரீஷியஸ். இங்கிலாந்துக்காரர்கள், மொரீஷியஸைக் கைப்பற்றியவுடன், தீவின்பெயரை மொரீஷியஸ் என்று மாற்றினர். 158 ஆண்டுகளுக்கு மொரீஷியஸ், இங்கிலாந்து வசம் இருந்தது.

இந்தியர்களின் வருகை:

Mauritius 1835-ம் ஆண்டு மொரீஷியஸில், அடிமை முறை ஒழிக்கப்பட்டது. பின்னர் இந்தியாவிலிருந்து அதிக அளவிலானதொழிலாளர்கள் இஙகு குடியேறினர். சில சீனர்களும கூட இங்கு வந்தனர். கரும்புத் தொழில் அதன் பிறகுவிறுவிறுப்படைந்தது. தற்போது, கரும்பு தவிர, சுற்றுலா, ஜவுளி ஆகியவையும் முக்கியத் தொழில்களாக உள்ளன.

மொரீஷியஸ், 1968-ம் ஆண்டு, மார்ச் மாதம் 12-ம் தேதி சுதந்திரமடைந்தது. 1967-ம் ஆண்டு மொரீஷியஸுக்குச்சுதந்திரம் தருவது தொடர்பான தீர்மானத்தை இங்கிலாந்து கொண்டு வந்தது. அதையடுத்து இத்தீவு சுதந்திரக்காற்றை சுவாசித்தது.

சுதந்திரத்திற்குப் பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடந்து வருகிறது. அதிபரே,ராணுவத்திற்கும் தலைவர் ஆவார். இருப்பினும் பிரதமரிடம்தான் அதிக அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன.நிர்வாகத் தலைவரும் அவரே.

மொரீஷியஸில் இரண்டு செய்தித்தாள்களே வெளி வருகின்றன. லீ மொரீஷியன் மற்றும் லி எக்ஸ்பிரஸ்.

மொரீஷியஸின் மக்கள் தொகை (1995-ம் ஆண்டு கணக்குப்படி), மொரீஷியஸ் (11 லட்சம்),ரோட்ரிக்ஸ் (34,000),மொத்தம் 11.5 லட்சம்.

சராரசி வயது ஆண்களுக்கு 66.4, பெண்களுக்கு 73.9. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 1 சதவீதம்.குடிநீர், சுகாதாரம் ஆகியவை இங்கு மிகச் சிறப்பான நிலையில் உள்ளன. மொத்தத்தில் அடிப்படை வசதிகள் மிகசிறப்பானவை.

மொரீஷியஸின் இப்போதைய பிரதமர் அனிரூத் ஜெகன்னாத், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ஆங்கிலம்,பிரெஞ்சு, இந்தி, போஜ்பூரி ஆகிய மொழிகளை அறிந்தவர். 1963 ல் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியஇவர் அதே ஆண்டு முதன் முதலாக எம்.எல்.ஏ.வாகப் பதவி வகித்தார்.

அரசியலில் சிறப்பாகப் பணிபுரிந்து மக்கள் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்ட அவர் 1965 முதல் 1967 வரைவளர்ச்சித்துறை இணை அமைச்சராக இருந்தார். பின்னர் 1967 ல் தொழில்துறை அமைச்சரானார்.

அதற்குப்பின் 1976 முதல் 1982 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 1983 ல் சோசலிச இயக்கத்தின்தலைவராகப் பதவி வகித்தார். அதற்குப் பின் 1992 ம் ஆண்டு மொரிஷியஸ் நாட்டுப் பிரதமராக பதவியேற்றார்.2000-மாவது ஆண்டு செப்டம்பர் 16 ம் தேதி மீண்டும் மொரிஷியஸ் பிரதமரானார்.

சென்னையில் கெளரவம்:

Anirudh Jeganath With his Wife and Presidents Familyதற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அனிரூத் வெள்ளிக்கிழமை சென்னை வருகிறார்.சென்னையில் உள்ள மொரிஷியஸ் தூதரகத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதிபர் (வலது ஓரம்), அவரது
மனைவியுடன் அனிரூத் தம்பதி.

பின்னர் இரவு 7.30 மணிக்கு அவர் கவர்னர் பாத்திமா பீவியை சந்தித்து அரசியல் உள்பட பல்வேறு விஷயங்கள்குறித்து விவாதிக்கிறார். அவருக்கு கவர்னர் பாத்திமா பீவி இரவு விருந்து அளிக்கிறார்.

ஜனவரி 20 ம் தேதி சென்னையில் டைடல் பார்க்கை பார்வையிடுகிறார் மொரிஷியஸ் பிரமதர். அதே நாள் மாலைஅவருக்கு சென்னைப் பல்கலைக் கழகம் சார்பில் டாக்டர் பட்டம் அளிக்கப்படுகிறது.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி வந்த மொரீஷியஸ் பிரதமர் அனீருத் ஜெகன்னாத்தை பிரதமர்வாஜ்பாய், குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் உள்பட பலர் வரவேற்றனர்.

இந்தியா வருவதில் எனக்கு இந்தியா வருவதில் மிகவும் மகிழ்ச்சி என்று கூறி தனது இந்தியப் பயணம் குறித்துதிருப்தியை வெளியிட்டார் அனிரூத்.

சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக பெங்களூர் வந்த அவர் ஜாலஹள்ளியில் உள்ள பிஈஎல் தொழிற்சாலை மற்றும்இன்போசிஸ், எச்.ஏ.எல். ஆகியவற்றைப் பார்வையிட்டார்.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்திய சாப்ட்வேர் வல்லுநர்கள்மொரீஷியஸூக்கு வந்து எங்கள் நாட்டவருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். தகவல் தொழில் நுட்பத்துறையில்இந்திய அடைந்துள்ள முன்னேற்றம் என்னை வியக்க வைக்கிறது. இந்தியா - மொரீஷியஸ் நல்லுறவு இன்னும்தழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அனிரூத்தின் பயணத்தால் இந்திய, மொரீஷியஸ் உறவு மேலும் வலுப்படும் என்று நம்பலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X