For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை விழாவைக் கலக்கிய இந்திய யானை

By Staff
Google Oneindia Tamil News

கண்டி (இலங்கை):

இலங்கையில் உள்ள புத்த மதக் கோவில் திருவிழாவையொட்டி நடந்த ஊர்வலத்தில் இந்திய யானை கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்தது.

இந்த யானையின் உடம்பில் வண்ண எம்ராய்டரி செய்யப்பட்ட சால்வை அணிவிக்கப்பட்டிருந்தது. வண்ண பல்புகளும், காரில் உபயோகப்படுத்தப்படும்கண்ணைப்பறிக்கும் பேட்டரிகளும் கழுத்தில் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தன.

கண்டியிலுள்ள புத்தர் கோவில் 250 வருடங்கள் பழமை வாய்ந்த கோவிலாகும். இங்குதான் புத்தரின் பல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்பெளர்னமி நாளில் துவங்கிய 11 நாள் திருவிழாவின்போது யானைகள் கலந்து கொண்ட ஊர்வலம் நடந்தது. அதில் இந்திய யானையான காவேரி ராஜாவும்கலந்து கொண்டது.

பல்வேறு யானைகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி காண்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் இருந்தது. காமிராக்களுக்கு அழகாகபோஸ் கொடுத்தன இந்த யானைகள். யானைகள் அணிவகுப்பு நிகழ்ச்சி தொடர்ந்து 6 மணி நேரம் நடந்தது.

யானைகள் ஊர்வலத்தில் மொத்தம் 7 யானைகள் பங்கேற்றன. ஊர்வலத்தில் கலந்து கொண்ட இந்திய யானை 1998 ம் ஆண்டு மைசூரிலிருந்து கொண்டுவரப்பட்டது. பிரதமர் வாஜ்பாய் காவேரி ராஜா என்றழைக்கப்படும் இந்த யானையை இலங்கைக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். இது மைசூர்மிருகக்காட்சி சாலையிலிருந்து கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பாக மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இந்திராராஜா என்ற யானையைபரிசாகக் கொடுத்தார்.

பெளர்ணமி தினத்தையொட்டி நடக்கும் விழாவில் 50 க்கும் மேற்பட்ட யானைகள் பங்கேற்கும். கோவில் திருவிழாவில் யானைகளை பெரிஹாரா என்றஅணிவகுப்பில் பங்கேற்க வைப்பார்கள்.

கால்நடை மருத்துவம் நிவேலி டீ சில்வா கூறுகையில், கோவில் திருவிழாவில் யானைகளை பங்கேற்க வைப்பது மிக மிக சிரமம். ஏனெனில் சில யானைகள்மிரண்டு விடும். சில யானைகள் மதம் பிடித்து ஓட்டம் பிடித்து விடும். திருவிழாவின் போது இருக்கும் சத்தங்கள், மின்சார விளக்குகளின் ஒளியில் நடந்து செல்லயானைகள் மிகவும் தயக்கம் காட்டும்.

கண்டி டவுன் கோவில் திருவிழாவில் 50 ஆண்டுகளாக மெஜஸ்டிக் ராஜா என்ற யானை பங்கேற்று வந்தது. ஆனால் அது 1988 ம் ஆண்டு இறந்தது.இதையடுத்து பல யானைகள் கோவில் திருவிழாவில் பங்கேற்று வருகின்றன. தற்போது இலங்கையில் மொத்தம் 21 கோவில் யானைகள் உள்ளன.இருப்பினும், கோவில் விழாவில் ஒரு பகுதியான பெரஹாரா என்ற நிகழ்ச்சியில் பங்கு கொள்ள நிரந்தரமாக ஒரு யானை கூட இல்லை என்பது வருந்தக்கூடியவிஷயம்.

இந்தியா தவிர தாய்லாந்தும், கண்டி கோவிலுக்காக பெரிய யானை ஒன்றையும், இரண்டு குட்டி யானைகளையும் பரிசளித்துள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X