For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவிகிறது உலக உதவி

By Staff
Google Oneindia Tamil News

டாக்கா:

குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20, 000 டன் அரிசியும், மருத்துவக்குழுவும் அனுப்பவுள்ளதாக வங்கதேச பிரதமர் ஷேக்ஹசினா வாஜித் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

வங்க தேசம் அனுப்பும் 12 பேர் கொண்ட டாக்டர்கள் குழு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகதிகளுக்குச் சென்று நிவாரண நடவடிக்கைகளைமேற்கொள்ளும்.

இங்கிலாந்து உதவி:

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 4 விமானங்களில் 1,200 கூடாரங்களை அமைப்பதற்கான துணி வகைகளை இங்கிலாந்து அனுப்புகிறது.

சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சர் க்ளாரே ஷார்ட் கூறுகையில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரிட்டன் 10 மில்லியன் பவுண்ட்களைஅளிக்கவுள்ளது. அதுமட்டுமின்றி, போர்வைகள், கூடாரங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் குஜராத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

மூன்று விமானங்களில் கூடாரங்களை அமைப்பதற்கான துணிவகைகள் அனுப்பப்படும். பெல்ஜியத்திலிருந்து வரும் ஒரு விமானத்தில் பிளாஸ்டிக் ஷீட்டுகள்,நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்புப் பணிகளுக்கான கனரக இயந்திரங்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்படும் என்றார். ஏற்கனவே இங்கிலாந்து 2மில்லியன் பவுண்டுகளை குஜராத்துக்கு அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

நார்வே உதவி:

குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 350 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைப்பதற்குத் தேவையான அனைத்துபொருட்களையும் நார்வே சிறப்பு விமானம் மூலம் குஜராத்துக்கு அனுப்புகிறது.

நார்வேயிலிருந்து பூகம்ப நிவாரண உதவிகளை வழங்கும் பணியைக் கண்காணித்து வரும் ஹால்வர் போசம் லூரிட்சன் கூறுகையில், குஜராத்தில் ஏற்பட்டது மிகவும்துயரமான சம்பவமாகும். இதுபோல் எதிர்காலத்தில் நடக்கக் கூடாது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் உதவி செய்து வந்த போதிலும், போனஉயிர்களை மீட்க முடியாது. செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் நாங்கள் நிவாரண உதவிகளை வழங்குகிறோம் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X