For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூகம்ப பலி .. சட்டசபையில் இரங்கல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

குஜராத் பூகம்பத்தில் இறந்து போன பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தமிழ்நாடுசட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்த இரங்கல் தீர்மானமும்செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

குஜராத்தில் இறந்து போனவர்களுக்காக நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்தின்மீது பேசும் போது அவை முன்னவர் அன்பழகன் கூறியதாவது:

முதல்வர் கருணாநிதி நிவாரண நிதியாக அரசு சார்பில் ரூ 5 கோடி அனுப்பியுள்ளார்.இது ஒரு துவக்கமே ஆகும், மேலும் பல நிவாரண உதவிகள் அனுப்பப்படும்.

அரசு அலுவர்கள் தங்கள் 1 நாள் சம்பளத்தை குஜராத் நிவாரண நிதிக்கு அளிக்க முன்வந்துள்ளார்கள்.

தமிழக தலைமைச் செயலாளரால் குஜராத் நில நடுக்க நிவாரண நிதிதுவக்கப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்கள் அனைவரும் கட்சி சார்பின்றி தாராளமாகநிதி வழங்கவேண்டும் என கூறினார்.

முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

குஜராத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகவும் கடுமையானது. குஜராத்துக்கு அரசு உயிர்காக்கும் மருந்துகள், உணவு பொருட்கள், உடைகளையும் அனுப்பி வைக்கும். மேலும்மருத்துவர்களையும் குஜராத்துக்கு அனுப்பி வைக்கும் என கூறினார்.

தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்கள் 1 மாத சம்பளத்தைகுஜராத் நிவாரண நிதிக்கு அளிக்க முன் வந்துள்ளனர்.

சட்டசபை எதிர்கட்சி தலைவர் சோ. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கட்சிபாகுபாடின்றி குஜராத் பூகம்பத்தில் இறந்து போன மக்களுக்குக்காக இரங்கல்தெரிவித்தனர். மேலும் அவர்கள் தங்கள் 1 மாத சம்பளத்தை நிவாரண நிதிக்குவழங்குவதாகவும் கூறினர்.

அதன் பின் குஜராத்தில் இறந்து போன மக்களுக்காக சட்டசபை உறுப்பினர்கள் 1நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X