For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டவர்களின் பரிதாபம்

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் மக்கள் மிகுந்ததுயரத்துடனும், மன அழுத்தத்துடனும் இருக்கிறார்கள் என்று அவர்களுக்குச் சிகிச்சையளித்து வரும் டாக்டர்கள்தெரிவித்தனர்.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு இடிபாடுகளுக்கிடையிலிருந்து மீட்கப்பட்டவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்கள் பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்பை இன்னும் ஜீரணிக்க முடியாத நிலையில்உள்ளனர்.

உறவினர்கள், உடைமைகளை, உடல் உறுப்புக்களை இழந்த துக்கத்தில் அவர்கள் மிகுந்த துயரத்துக்கும், மனஅழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளனர். பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் அனில்வியாஸ் கூறுகையில், இதுபோன்ற பாதிப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களின் மனதை விட்டு அகல பல வருடங்கள்ஆகும்.

அவர்கள் வழக்கம் போல் மாறுவதற்கு ஆலோசனைகள், பரிவு மற்றும் ஆறுதல் வார்த்தைகள் தேவைப்படும்.மேலும் அவர்கள், பூகம்ப அதிர்ச்சியிலிருந்து விடுபடுவதற்கும், மனோதிடத்தைப் பெறுவதற்கும் சில வருடங்கள்ஆகலாம். மேலும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.

மும்பையிலுள்ள சுகாதார அதிகாரிகள், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட 300 க்கும் மேற்பட்ட மக்கள் மும்பையில் பலமருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் விமானங்கள், ரயில்கள் மற்றும்பஸ்கள் மூலம் மும்பை மற்றும் இதர நகரங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவர் கூறுகையில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பலர் இங்குசேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்றுவருபவர்களால் இரவு நேரங்களில் தூங்க முடிவதில்லை. அவர்கள் திடீர் திடீர் என்று அழுகிறார்கள். அவர்களால்இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை.

சிகிச்சை பெற்று, சகஜ நிலைக்குத் திரும்பியவர்களுக்கு பத்திரிக்கைகளை வாசித்தல், தொலைக்காட்சி செய்தியைப்பார்த்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X