For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரைகின்றன விறகுகள்

By Staff
Google Oneindia Tamil News

கமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தில் இடிபாடுகளுக்கிடையில் கிடக்கும் அழுகிய சடலங்களை எரிப்பதற்காக மாநிலத்தின் பல்வேறுஇடங்களிலிருந்து விறகுகள் கட்ச் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் கட்ச் மாவட்டத்தில் மட்டும் 10,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு பல கிராமங்கள் மற்றும் நகரங்களில் கட்டிட இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய சடலங்களை எரிப்பதற்காக மாநில அரசு இதுவரை சுரேந்திரநகரிலிருந்து 350 லாரிகளில் விறகுகள், பட்டான் மற்றும் மேஹ்சானா மாவட்டங்களிலிருந்து தலா 87 லாரிகளில் விறகுகள், பானாஸ்காந்தாமாவட்டத்திலிருந்து 124 லாரி விறகுகளை அனுப்பி வைத்துள்ளது.

இந்த விறகுகள், அழுகிய சடலங்களை உடனடியாக எரிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கட்டிட இடுபாடுகளை அகற்ற, அகற்ற சடலங்களாகவருவதால் அவற்றால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் உடனடியாக சடலங்களை எரிக்கும் படி மீட்புப் பணியாளர்கள்வலியுறுத்தப்பட்டுள்ளனர். கட்ச் மாவட்டத்தில் மட்டும் கட்டிட இடிபாடுகளில் பல சடலங்கள் உள்ளன.

கட்ச் மாவட்டத்திலுள்ள பூஜ், பச்சாவ் மற்றும் சிறு, சிறு கிராமங்களில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, குடிநீர், மருந்துகள்மற்றும் பிற நிவாரணப் பொருட்கள் கிடைக்கவில்லை. பூகம்பம் ஏற்பட்ட ஜனவரி 26 ம் தேதி முதல் பல லாரிகளில் நிவாரணப் பொருட்கள் குஜராத்நோக்கிச் சென்ற வண்ணம் உள்ளன. இருப்பினும் கிராம மக்களுக்கு இவைகள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது.

கட்ச் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள அரசு சாரா நிறுவன ஊழியர்கள் தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறமும் நின்று கொண்டு பூகம்பத்தால்பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும தண்ணீர் பாட்டில்களை விநியோகித்து வருகின்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X