For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனியும் இது வேண்டாம்

By Staff
Google Oneindia Tamil News

சுரேந்திரநகர் (குஜராத்):

ஜனவரி 26 ம் தேதி குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சவிதா பென் வாழ்க்கையின் அனைத்து வகையான கொடுமைகளையும்அனுபவித்து விட்டார் என்றே கூறலாம்.

சுரேந்திர நகரைச் சேர்ந்தவர் சவிதா பென் ஷீத். வயது 72. இவர் தனக்கு ஆதரவாக இருந்த ஒரே ஒரு மகனையும் பூகம்பத்தில் பலி கொடுத்து விட்டார்.இவரும், வயதான இவரது கணவரும் பூகம்பத்தால் வீட்டையும், உடைமைகளையும் இழந்து விட்டதால் வெட்டவெளியில் படுத்துக் கொண்டுவாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். இவரது கணவரால் நடக்கக் கூட முடியாது.

இவர்களது மருமகளும், பேரனும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டு 13நாட்களாகியும் இவருக்கு இன்னும் அரசு உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. தபால் நிலையத்தில் இவர் முதலீடு செய்துள்ள பணத்திலிருந்து மாதாமாதம்கிடைக்கும் வட்டி ரூ 600 ஐ வைத்துத்தான் குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும்.

சுரேந்திரநகர் மாவட்டத்திலுள்ள பழைய லிம்ப்டி என்ற பகுதி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 35, 000 மக்களும், தங்களதுவீடுகளையும், உடைமைகளையும் இழந்து விட்டனர். மொத்தம் உள்ள 10 பள்ளிகளில் 5 பள்ளிகள் இடிந்து தரைமட்டமாகி விட்டன. மீதி 5 பள்ளிகளில்மாணவர்கள் நுழைய முடியாதவாறு சேதம் ஏற்பட்டுள்ளது.

சுரேந்திர நகர் மாவட்டத்திலுள்ள அங்க்கேவாடியா, பட்ரேசி, போகிகா, போனோஸ்னா, ஜாம்டி, கார்வா, லாடியா, மாட்ஹாட், மேம்கா,நவானியா, சாம்லா மற்றும் சாவ்கா ஆகிய கிராமங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு நிவாரண உதவிகள் இன்னும்கிடைக்கவில்லை.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X