For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தப்பித்த "தாசில்தார்

By Staff
Google Oneindia Tamil News

அஞ்சார்:

குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் கட்ச் மாவட்டத்திலுள்ள அஞ்சார் நகர் முற்றிலுமாக அழிந்து விட்டபோதிலும், அங்குள்ள தாசில்தார் அலுவலகம் மட்டும் எவ்வித சேதமுமின்றி உள்ளது.

தாசில்தார் அலுவலக சுவரில் அஞ்சார் நகர் உருவானபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அப்படியே உள்ளது.இதுதான் இன்று அஞ்சார் மாநிலத்தில் பூகம்பத்தையும் தாண்டி எஞ்சிய பொருள்.

தாசில்தார் அலுவலகத்தில் தற்போது இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ராய் சவுத்ரி மற்றும் சஞ்சய் குப்தா ஆகியோர்பணிபுரிந்து வருகின்றனர். தாசில்தார் நவின் பாய் ஆடுச்சியா என்பவர் இறந்து விட்டார்.

இவர் தனது அலுவலக வாகனத்தில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியைக் காணச் சென்றிருந்த போது இவரதுவீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது. அலுவலக வாகனத்தில் சென்ற அவரும் இறந்து விட்டார். வாகனம்சாலையில் வந்து கொண்டிருந்த போது, ஏற்பட்ட பூகம்பத்தில் அவர் இறந்தார்.

அப்போது இவர் கலந்து கொள்ள வந்த மைதானத்தில் உள்ள இரண்டு சுற்றுப்புறச் சுவர்களும் இடிந்து விழுந்ததில்விவேகானந்தா பள்ளி 7 ம் வகுப்பு மாணவ, மாணவியர் 150 பேரும் உயிரிழந்தனர். அவர்கள் சாரே ஜஹான் சிஅச்சா என்ற பாடிக் கொண்டே இறந்தனர் என்பது மிகவும் கொடுமையான விஷயம்.

இதே அஞ்சாரில் கடந்த 1968 ம் ஆண்டு பூகம்பம் ஏற்பட்டது. அப்போது அஞ்சாரில் உள்ள பல பகுதிகள்அழிந்தன. அதையடுத்து தற்போது ஏற்பட்ட பூகம்பத்தில் அஞ்சார் நகர் முழுவதுமாக அழிந்து விட்டது என்றேகூறலாம்.

பழைய அஞ்சார் நகரில் இடிபாடுகளுக்கிடையிலிருந்து 2,400 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இங்கு மொத்த மக்கள்தொகை 78,000 ஆகும். இப்போது புதிய அஞ்சாரில் பூகம்பத்தால் தப்பித்தவர்களால் மட்டுமே அஞ்சார் நகர்மீண்டெழும் என்று கருதப்படுகிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X