For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக்கெட்டை கிழிக்குமா பட்ஜெட்?

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

வரும் பட்ஜெட்டில் வரி விதிப்புகள் மிகக் கடுமையாக இருக்கும் என நம்பப்படுகிறது.

பூகம்பத்தால் குஜராத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை ஈடுகட்டும் வகையில் வரிகள் மூலம் அதிக அளவில் நிதி திரட்ட மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதனால் சாமானியர்கள் மீது வரிச் சுமை மிக அதிகம் இருக்கும் எனத் தெரிகிறது.

குஜராதுக்காக ஏற்கனவே வருமான வரி மீது 2 சதவீத கூடுதல் வரி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 1,300 கோடி ரூபாய்கிடைக்கும். இந் நிலையில் ஊதியம் வாங்கும் சமானிய மக்கள் மீது மேலும் வரி போடப்பட வாய்ப்பில்லை என ஒரு தரப்பினர்கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால், குஜராத்தில் ஏற்பட்டுள்ள சேதம், பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டுபார்த்தால் வரிகளை உயர்த்தாவிட்டால் மத்திய அரசு பெரும் நிதி நெருக்கடியில் சிக்கும் வாய்ப்புள்ளது.

இப்போது ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் ஊதியம் வாங்குவோருக்கு 35 சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது. இந்த ஊதியவிகிதத்தை உயர்த்த வேண்டும் என பலத்த கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், குஜராத் சோகத்தால் இதை மத்தியஅரசு அமல்படுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருள்கள் மீதான வரியை குறைக்கவும்இப்போதைக்கு வாய்ப்பில்லை.

இதனால் மாத ஊதியத்துக்கு பணிபுரியும் மத்திய தர மக்கள் மீது பட்ஜெட் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

ரயில் கட்டணத்தையும், சரக்கு ரயில் கட்டணத்தையும் வழக்கம் போல் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.ஆனால், இதற்கு ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். அவரை அலட்சியப்படுத்தினால்அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகும் அபாயம் உள்ளது. இதனால், ரயில் கட்டண உயர்வு இருக்காது என்றே தெரிகிறது.அப்படியே உயர்த்தப்பட்டாலும் இரண்டாம் வகுப்புக் கட்டணத்தை மம்தா உயர்த்த விட மாட்டார் என நம்பப்படுகிறது.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவியான தயா சிங் என்பவர் கூறுகையில். வர வர பட்ஜெட் மிகக்கடுமையானதாகிவிட்டது. மாத ஊதியம் வாங்குவோர் தான் இதனால் மிக அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். வியாபாரிகளுக்குதங்களது வருமானத்தை மறைக்கவும் போலி கணக்கு காட்டவும் பல வழிமுறைகள் உள்ளன.

ஆனால், மாத ஊதியம் வாங்குவோரிடம் தான் வரியை வசூலித்துவிட்டுத் தான் சம்பளத்தையே கொடுக்கிறார்கள். ஓய்வூதியம்வாங்குவோரும் வெறுத்துப் போய் தான் உள்ளனர். வரி பிடித்தம் அதிக அளவில் இருப்பதால் தங்களது தேவைகளையும்வாழ்க்கைத் தரத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஓய்வூதியர்கள் தள்ளப்படுகின்றனர்.

மேலும், சிறுசேமிப்பு மற்றும் வங்கி முதலீடுகள் மீதான வட்டியையும் அரசு தொடர்ந்து குறைத்து வருவதும் கவலை அளிக்கிறது.குஜராத்தை நினைத்தால் கவலையாகத் தான் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு இந்தியனின்கடமை. ஆனால், குஜராத் பெயரைச் சொல்லி ஒரு முறை கூடுதல் வரி வசூலிப்பதோடு விட்டுவிட வேண்டும். இதை தொடர்கதைஆக்கிவிடக் கூடாது என்கிறார் தயா சிங்.

(மத்திய அரசு அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு பயணம், சுற்றுலா செல்வதற்கு மட்டும் ஆண்டுக்கு 750 கோடி ரூபாய் செலவுசெய்யப்படுகிறது. மத்திய அரசின் அதிகாரிகளின் ஊதியத்துக்கு மட்டும் 32,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.)

தேர்தல் பயத்தில் மத்திய அரசு:

அத்தியாவசியப் பொருள்களின் விலையை உயர்த்தி வரி வசூலை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டாலும் அரசியல்காரணங்கள் இதற்கு பெரும் தடையாக உள்ளன.

விரைவில் தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. தமிழத்தில் ஆட்சியில் உள்ளதி.மு.க. மத்திய அரசின் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. கடும் வரி விதிப்பு இருந்தால் தி.மு.கவுக்கும் சேர்த்துத் தான் கெட்டபெயர் ஏற்படும். மத்தியில் ஆட்சியில் தொடர தி.மு.கவின் ஆதரவு மிக அவசியம் என்ற நிலையில் அக் கட்சியின பேச்சுக்குபா.ஜ.க. அரசு மதிப்பு கொடுத்தே ஆக வேண்டும் நிலை உள்ளது.

தேர்தல் கருத்துக் கணிப்புகளில் தி.மு.கவுக்கு இணையாக அ.தி.மு.கவும் மிக பலத்துடன் உள்ள நிலையில் மத்திய அரசின் கடும்வரி விதிப்பை தி.மு.க. நிச்சயம் எதிர்க்கும்.

தேர்தலை சந்திக்கப் போகும் பிற மாநிலங்களிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான். எல்லா மாநிலங்களிலும் ஏதாவது ஒரு கட்சிமத்திய அரசின் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இதனால் கடும் வரி விதிப்பு எதையும் அமல்படுத்த முடியாத நிலையில் மத்தியஅரசு உள்ளது என்கிறார் தொழில்துறை ஆலோசகர் மேத்தா.

பிகார் தலைநகர் பாட்னாவில் ரிக்ஷா ஓட்டும் துலால் என்பவர் கூறுகையில், மண்ணெண்ணை, போஸ்ட் கார்ட், மணி ஆர்டர்ஆகியவற்றின் விலையை மட்டும் உயர்த்தாமல் இருந்தால் போதும். இவற்றின் விலை உயர்ந்தால் என் நிலைமை அவ்வளவு தான்என்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X