For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிறைவடைந்தது கும்ப மேளா

By Staff
Google Oneindia Tamil News

கும்ப்நகர்:

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தொடர்ந்து 42 நாட்களாக நடந்து வந்தகும்ப மேளா நிகழ்ச்சி மகாசிவராத்திரியான புதன்கிழமையுடன் முடிவடைகிறது.

அலகாபாத்திலுள்ள கும்பாநகரில் கோடிக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்கள். உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் இந்தகும்ப மேளாவில் கலந்து கொண்டார்கள்.

12 வருடங்களுக்கு ஒரு முறைதான் இந்த கும்ப மேளா நிகழ்ச்சி நடக்கும். இந்த கும்பமேளாவில் இந்த வருடம் மட்டும் ஏறக்குறைய 100 மில்லியன்பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பெரும் திரளான வெளிநாட்டு பக்தர்களும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிவனுக்குப் பூஜை செய்யும் மகா சிவராத்திரியானபுதன்கிழமையுடன் கும்பமேளா நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

கும்பமேளா நிகழ்ச்சி முடிந்ததும் தனது சொந்த மாநிலமான ஆந்திரா செல்லுமுன் நாராயண் ரெட்டி (70) என்பவர் கூறுகையில், நான் என் வாழ்க்கையில்செய்த பாவங்களையெல்லாம் திரிவேணி சங்கமத்தில் நீராடி பரிசுத்தப்படுத்திக் கொண்டேன். இனிமேல் என் வாழ்வில் எந்தத் தீமையும் நடக்காது. பாவச்செயல்களில் நான் ஈடுபட மாட்டேன் என்றார்.

கும்பமேளாவைக் காண்பதற்காக பாத்திரங்கள், துணிமணிகள் மற்றும் அனைத்து பொருட்களுடனும் அலகாபாத் வந்திருந்த பக்தர்கள் கும்பமேளாமுடிவடைந்ததையடுத்து தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

அலகாபாத்தைச் சேர்ந்த 62 வயது மெஹ்ரோட்ரா கூறுகையில், கும்பமேளா நிகழ்ச்சியைக் கண்டு களித்தது என் வாழ்வின் மிகப்பெரிய அனுபவமாகும்.மேளா நிகழ்ச்சியின் போது மிகப் பெரிய அளவில் அசம்பாவிதச் சம்பவங்கள், விபத்துக்கள் ஏற்படாதது மனதை மகிழ வைக்கிறது என்றார்.

கும்பாநகரில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்த போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், 42 நாட்கள் நடந்த இந்தக் கும்ப மேளாவில் கூட்டநெரிசலோ,இடிபாடுகளோ, சண்டை சச்சரவோ ஏற்படவில்லை என்பது என்றார்.

மேலும் அலகாபாத் வந்த பக்தர்கள் தங்கும் வகையில் நூற்றுக்கணக்கான உயர் போலீஸ் அதிகாரிகள் அரசு அதிகாரிகள், கூடாரங்கள்அமைப்பவர்கள், பக்தர்களுக்காக அனைத்து உதவிகளையும் செய்தார்கள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பக்தர்களுக்கு எவ்விதப்பிரச்சனையும் ஏற்படாதவாறு பாதுகாப்புக் கொடுத்து வந்தார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர் மோலி பர்டன் கூறுகையில், கும்ப மேளாவில் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படாதவாறு போலீஸார்ஒத்துழைப்புக் கொடுத்தார்கள் என்றார்.

முன்னதாக மாநில அரசு கும்பமேளா அத்தியாவசியச் செலவுகளுக்காக ரூ 1.2 பில்லியனில் பல வசதிகள் செய்து கொடுத்திருந்தது. குறிப்பாக, பக்தர்கள்தங்குவதற்காக பல ஹை டெக் டென்ட்டுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, 1954 ம் ஆண்டு நடந்த கும்பமேளாவில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 1,000 பேர் இறந்தனர். 1989 ம் ஆண்டு இடிபாடுகளில் சிக்கி 60பேர் உயிரிழந்தனர். ஆனால் இந்த வருடம் நடந்த கும்பமேளாவில் எந்த அசம்பாவிதச் சம்பவங்களும் நடக்கவில்லை என்பது மகிழ்ச்சியானவிஷயமாகும்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X