For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென் மாவட்டங்களில் திமுகவுக்கு வேட்டு வைக்கிறது மதிமுக

By Staff
Google Oneindia Tamil News

விளாத்திகுளம்:

திமுக கூட்டணியிலிருந்து அதிரடியாக மதிமுக வெளியேற்றப்பட்டதால் தென்மாவட்டங்களில் திமுக கூட்டணியின்வெற்றி வாய்ப்பு கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் 1996ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக, தமாகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டன.அப்போது அதிமுகவுக்கு எதிரான அலை வீசியதால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

அந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக, பாஜக அணிகளும், அதிமுக, காங்கிரஸ் கூட்டணியும்தோல்வியைத் தழுவின. வைகோ உள்பட பலர் தோல்வியைத் தழுவினர்.

மேலும் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற பிற கட்சி வேட்பாளர்கள், மதிமுக வேட்பாளர்களை குறைந்த அளவுவாக்குகள் வித்தியாசத்திலேயே தோற்கடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனால் தற்போது திமுக கூட்டணியிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட மதிமுகவால் திமுக கூட்டணிக்குக்கிடைக்கும் வாக்குகள் குறையும் என்று கருதப்படுகிறது.

மேலும் லட்சியத்தில் உறுதி, அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என்ற கொள்கையுடன் 3 வது அணிஅமைத்து தேர்தலை சந்திக்கக் களம் இறங்குகிறது மதிமுக.

கடந்த தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்ட வைகோ 29,556 வாக்குகள் பெற்று இரண்டாம்இடத்தைப் பெற்றார்.

கடந்த தேர்தலில் தென்மாவட்டங்களில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், விருதுநகர்,இளையான்குடி, தேனி, சமயநல்லூர், சங்கரன்கோவில் உள்பட பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்3 வது இடத்தைப் பெற்றது மதிமுக.

இந்நிலையில், திமுக கூட்டணியில் புதிதாகச் சேர்ந்துள்ள ஜாதிக்கட்சிகளுக்கு அதிக மரியாதையும், கெளரவமும்கொடுக்கப்படுகின்றன என்று பரவலாக ஒரு கருத்து எழுந்துள்ளது.

திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவில் சேர்ந்த தமிழ்க்குடிமகன், தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடிராமமூர்த்தி, தெலுங்கர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளும் இதையே கூறியுள்ளன.

இதனால் மக்கள் மீண்டும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கத் தயக்கம் காட்டும் நிலை ஏற்படும். மேலும்தென்மாவட்டங்களில் உள்ள முஸ்லீம்களின் வாக்குகளும் மதிமுகவுக்கு விழலாம் என்று தெரிகிறது.

தென்மாவட்டங்களில் மதிமுக அமோக வெற்றி பெறும் என்று கூற முடியாவிட்டாலும் திமுக கூட்டணியின்வெற்றியைப் பாதிக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.

ஏற்கனவே இந்தப் பகுதியில் பலம் பெற்றுள்ள அதிமுகவுக்கு இதனால் பெரும் லாபம் கிடைக்கலாம். தென்மாவட்டங்களில் அழகிரியால் திமுகவில் நிலவும் குழப்பமும் அதிமுகவுக்கே சாதகமாக அமையும்.

இதைக் கருணாநிதி எப்படி சமாளித்து காய் நகர்த்தப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X