For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலிய இந்திய தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சிட்னி:

ஆஸ்திரேலியாவில் கட்டப்படும் கோவிலில் பணிபுரிந்து வந்த இந்தியாவைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் கொடுக்கப்பட்டு வந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட உள்ளது.

ஆஸ்திரேலியாவில் கட்டப்பட்டு வருகிறது ஸ்ரீவெங்கடேஸ்வரா கோவில். இங்கு இந்தியாவைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தார்கள். இவர்களுக்கு குறைவான ஊதியம் கொடுக்கப்பட்டதால் கட்டிடத்தொழிலாளர்களிக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் இடையே பிரச்சனை நிலவி வந்தது.

இவர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க கோயில் நிர்வாகம் ஒப்புக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்தபிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுவரை கட்டிடப் பணியாளர்களுக்கு குறைவான ஊதியம் கொடுக்கப்பட்டு வந்ததால், அவர்களுக்குகொடுக்கப்பட வேண்டி நிலுவைத் தொகை கொடுக்கப்பட்டால் பணிபுரியும் 8 கட்டிடத் தொழிலாளர்களில்ஒவ்வொருவருக்கும் 1 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர் கிடைக்கும்.

இந்த நிலுவைத் தொகை இந்து கோவில் கட்டும் பணியில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக பணிபுரிந்துவரும்பணியாளர்களுக்கு கொடுக்கப்படும். இது ஆஸ்திரேலிய பணியாளர்களுக்கு வழங்கப்படும் வார ஊதியமான 585ஆஸ்திரேலிய டாலர் என்ற அளவை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்பட்டு வழங்கப்படுகிறது.

இந்த தொகையில் போனஸ், விடுமுறை நாட்களில் பணிபுரிந்ததற்காக அளிக்கபடும் ஊதியமும் அடங்கும்.

பிப்ரவரி மாதம் 28ம் தேதி ஆஸ்திரேலியாவில் இருக்கும் கட்டமான, வனத்துறை சுரங்க மற்றும் மின்துறைகழகத்தைச் சேர்நத (சி.எப்.எம்.இ.யூ) சில உறுப்பினர்கள் கோவிலுக்கு திடீர் விஜயம் செய்தனர். அவர்கள் அங்குபணிபுரிந்து வந்த இந்தியாவைச் சேர்ந்த 8 கட்டிடத் தொழிலாளர்களை தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

சி.எப்.எம்.இ.யூ.கழகத்தினர் பணியாளர்களுக்கு ஊதியம் மிகவும் குறைவாக கொடுக்கப்படுகிறது. அவர்கள்மிகவும் மோசமான இடத்தில் கோவிலுக்குள்ளே வசித்து வருகின்றன என கூறினர். அவர்கள் கட்டிடத்தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய குறைவான ஊதியத்தைக்கூட கொடுக்காததற்காக கோவில்நிர்வாகத்தின் மீது அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சி.எப்.எம்.இ.யூவினர் கோவிலில் சோதனை நடத்தியதால் கோவிலின் புனிதத்தன்மைைக்கு பாதகம் விளைவித்துவிட்டார்கள் என சில இந்து அமைப்புகளும், கோவில் நிர்வாகத்தினரும் குறை கூறியுள்ளனர்.

கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபில் தவே கூறுகையில், ஊதிய வரம்பு குறித்து எந்த விதமான முடிவும்எட்டப்படவில்லை என்றாலும், இந்த விஷயத்திற்கு தீர்வு காண்பதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறதுஎன்றார்.

கட்டிடப் பணியாளர்கள் தற்போது சிட்னியின் புறநகர் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தென்பகுதி தொழிலாளர் கவுன்சில் செயலாளர் குடியேற்றத்துறை அமைச்சர் பிலிப் ரடாக்கை கட்டிடப்பணியாளக்தளுடன் சந்தித்து பேசினார். அதன் பின் நிருபர்களிடம் கூறுகையில், இந்திய கட்டிடப்பணியாளர்களுக்கான ஊதியம் 1 மில்லியனுக்கு குறையாமல் இருக்கும் என்றார்.

இந்த விஷயம் பல பொதுமக்ககளின் கவனத்தையும், பத்திரிகையாளர்கள் கவனத்தையும் ஈர்த்தது. சி.எப்.எம்.இ.யூகட்டிடப் பணியாளர்கள் தினசரி செலவிற்காக மாதம் ஒன்றிற்கு 50 ஆஸ்திரேலிய டாலருக்கு குறைவாகவும்வழங்கப்படுகிறது.

தமிழகத்தின் தேவக்கோட்டையில் வசிக்கும் அவர்கள் குடும்பத்திற்கு மாதம் ஒன்றிற்கு 400 ஆஸ்திரேலிய டாலர்கள்அனுப்பி வைக்கப்படுகிறது.

கோவில் நிர்வாகத்தினர் அனுமதியின்றி பணியாளர்கள் வெளியே செய்ய அனுமதிக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X