For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருப்பு பணத்தை ஒழித்தால் லஞ்சத்தை ஒழிக்கலாம்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கருப்புப் பணத்தை ஒழித்தால் தான் லஞ்ச, ஊழலை ஒழிக்க முடியும் என லஞ்ச ஒழிப்புத் துறை கமிஷனர் என்.விட்டல் தெரிவித்தார்.

கோவையில் விட்டல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்திய அரசின் முக்கிய வருவாயினங்களில் ஒன்று வருமானவரி. இந்த வரிக்கும் விலக்கு அளித்து வருகின்றனர்.வருமான வரியிலிருந்து விலக்குப் பெற 139 வழிமுறைகள் உள்ளன. இந்த சட்ட விதிகளின் படி வருமானவரிவிலக்கு பெற்றுக் கொள்ளலாம்.

இதை முதலில் ஒழிக்க வேண்டும். வருவாய்க்கு ஏற்ப வருமான வரி செலுத்தும் வகையில் புதிய சட்டத் திருத்தம்எல்லோருக்கும் தேவை. குறிப்பிட்ட ஒரு தொகைக்கு மேல், உதாரணமாக 2 லட்சம் அல்லது 5 லட்சத்திற்கு மேல்வருமானம் உள்ளவர்கள் ஆண்டுக்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இதில் எவ்வித விலக்கும் இல்லை எனஅறிவித்தால் போதும். அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.

தற்போது இந்தக் கணக்குப் படி 17 சதவீதம் தான் அரசுக்குக் கிடைத்து வருகிறது. எனவே, வேறு எவ்விதசிக்கலுமின்றி, எளிதாக மக்கள் வரி செலுத்த முடியும். யாருக்கும் பாதிப்பு இருக்காது. அனைவருக்கும் சமமானசட்டமாகவும் இருக்கும்.

இதே போன்று கலால் வரிச் சலுகையையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும். பினாமி சொத்துக்களை ஒழிக்க சட்டம்கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் அமல்படுத்தப்படாமல் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேல் வீணாக உள்ளது.இதனை உடனடியாக அமல்படுத்துவது அவசியம்.

எளிமையான சட்டவிதிகள், உறுதியான தண்டனை மூலம் மட்டுமே கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும்.

ஊழல் வழக்கில் சிக்குபவர்களில் 6 சதவீதத்தினர் மட்டுமே தண்டனை பெறுகின்றனர். 94 சதவீதம் பேர் தப்பிவிடுகின்றனர். எனவே, அரசு செயல்பாடுகள் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

அரசு ஊழியர்களில் 10 சதவீதம் மட்டுமே நேர்மையானவர்கள். 10 சதவீதம் பேர் மிகவும் மோசமானவர்கள்.மீதள்ள 80 சதவீதம் பேர் அரசு நடைமுறைகளை மட்டுமே கடைபிடித்து அதன்படி நிடக்கின்றனர்.

லஞ்ச ஊழலை ஒழிக்க 1,248 வகை செயல் திட்டங்கள் உள்ளன. இவை அனைத்தும் செயல்படுத்தப்படாமல்கிடப்பில் போடப்பட்டிருந்தன. நான் பொறுப்பேற்ற பிறகு இதை 200 ஆகக் குறைத்துள்ளேன்.

வேட்பாளர்களுக்கு அரசு செலவு செய்வது என்பது மக்களின் பணத்தை வீணடிப்பதற்குச் சமம். எந்தக் கட்சிக்குஎவ்வளவு பணம் கொடுக்க முடியும்? எந்தக் கட்சி நிரந்தரமானதாக இருக்கும்? இப்போதுள்ள அரசியல் கட்சிகள்அரசிடம் தங்களுக்கு எவ்வளவு பணம் உள்ளது என்பதைக் கணக்கு காண்பிக்கலாமே என்றார் விட்டல்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X