For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. அமைச்சரவையில் மேலும் 19 அமைச்சர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அமைச்சரவையில் மேலும் 19 அமைச்சர்கள்சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா கடந்த 14-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 5 அமைச்சர்களும்பதவியேற்றனர். இந்த நிலையில், சனிக்கிழமை அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டது.

சென்னை கிண்டியுள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் புதியஅமைச்சர்களுக்கு ஆளுநர் பாத்திமா பீவி பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

முதல் அமைச்சராக பொள்ளாச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஜெயராமன் பதவியேற்றார். கடைசியாகஆலங்குடி ஏ.வெங்கடாச்சலம் பதவியேற்றுக் கொண்டார். அனைத்து அமைச்சர்களும் ஆண்டவன் பெயரில்ஆணையிட்டு உறுதி ஏற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு விழா நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், சசிகலா, அதிமுக எம்.எல்.ஏக்கள்,எம்.பிக்கள், கூட்டணிக் கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதிமுக தொண்டர்களும்பெரும் திரளான அளவில் திரண்டிருந்தனர்.

பதவியேற்பு விழா துவங்கிய சிறிது நேரத்தில் மின் தடை ஏற்பட்டது. 5 நிமிடங்கள் நீடித்த மின் தடை பின்னர்சரியானது. ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற போதும் மின்தடை ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

தற்போதைய ஜெயலலிதா அமைச்சரவையில் அவரையும் சேர்த்து 25 பேர் இருக்கிறார்கள். கடந்த முறைஜெயலலிதா அமைச்சரவையில் 34 பேர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சராகப் பதவியேற்ற ஓமலூர் செம்மலை, துணை சபாநாயகர் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது. ஆனால்அவர் கடைசி நிமிடத்தில் அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனைத் தோற்கடித்ததற்காக ஆலந்தூர் எம்.எல்.ஏ. பா.வளர்மதிக்கு அமைச்சர்பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா அமைச்சரவையில் புதிதாகச் சேர்ந்த அமைச்சர்கள் விவரம்:

1.பொள்ளாச்சி ஜெயராமன்.

2.ஓமலூர் எஸ்.செம்மலை.

3.சேடப்பட்டி சி.துரைராஜ்.

4.மொடக்குறிச்சி பி.சி.ராமசாமி.

5.பெரியகுளம் ஓ.பன்னீர் செல்வம்.

6.கன்னியாகுமரி தளவாய் சுந்தரம் (இவர் தற்போது எம்.பியாக உள்ளார்).

7.ராமநாதபுரம் அன்வர் ராஜா.

8.அணைக்கட்டு கே.பாண்டுரங்கன்.

9.காஞ்சிபுரம் எஸ்.எஸ்.திருநாவுக்கரசு.

10.சங்ககிரி பி.தனபால்.

11.நத்தம் ஆர்.விஸ்வநாதன்.

12.ஆலந்தூர் பா.வளர்மதி.

13.கண்டமங்கலம் வி.சுப்ரமணியன்.

14.திருநெல்வேலி நைனார் நாகேந்திரன்.

15.பத்மநாபபுரம் கே.பி.ராஜேந்திர பிரசாத்.

16.திண்டிவனம் சி.வி.சண்முகம்.

17.ஸ்ரீவைகுண்டம் சண்முகநாதன்.

18.மேட்டுப்பாளையம் ஏ.கே.செல்வராஜ்.

19.ஆலங்குடி ஏ.வெங்கடாச்சலம்.

இவர்கள் தவிர 14-ம் தேதி பதவியேற்ற அமைச்சர்கள்:

  • சி.பொன்னையன்.

  • தம்பித்துரை.

  • அய்யாறு வாண்டையார்.

  • ஜெயக்குமார்.

  • உப்பிலியாபுரம் சரோஜா.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X