For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வால்டேர் தேவாரம் கடந்து வந்த பாதைகள்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் தமிழக அதிரடிப்படைத் தலைவராக முன்னாள் டி.ஜி.பி. வால்டேர்தேவாரம் பொறுப்பேற்கவுள்ளார்.

முறுக்கு மீசையுடன், உரமேறிய உடலுடன் சிக்கென, போலீஸாரும் பொறாமைப்படும் சுறுசுறுப்புடன் டி.ஜி.பி.யாகஇருந்தவர் வால்டேர் தேவாரம்.

கேரள மாநிலம் மூணாறில் பிறந்தவர் தேவாரம், சுறுசுறுப்பாக பணியாற்றும் குணம் கொண்டவர். "வெட்டு ஒன்று,துண்டு ஒன்று" என்று பேசுபவர். எடுத்த காரியத்தைக் கச்சிதமாக முடிக்காமல் விடாதவர். அகில இந்திய அளவில்துப்பாக்கிச் சுடுதலில் பல முறை விருதுகள், பரிசுகள் பெற்றவர்.

தமிழக காவல்துறையில் பல பதவிகளை வகித்த தேவாரம், ஜெயலலிதா கடந்தமுறை முதல்வராக இருந்தபோதுடி.ஜி.பி. பதவிக்கு உயர்ந்தார். தேவாரம் குறித்து காவல்துறையில் பல கதைகள் கூறப்படுவதுண்டு. அத்தனைகதையும் அவரது வீர, தீரத்தைப் புகழ்வதாகும்.

தற்போது 61 வயதாகும் தேவாரம், ஸ்ட்ரிக்டான அதிகாரி என்ற பெயர் பெற்றவர்; துணிச்சல் மிக்கவர்;நேர்மையானவரும் கூட. வழக்கமாக திருடர்களுக்குத்தான் போலீஸாரைப் பார்த்தால் பயம் வரும். ஆனால்தேவாரத்தைப் பற்றி நினைத்தால் போலீஸாருக்கே பயம் ஏற்படுமாம். அத்தனை கெடுபிடியானவர் தேவாரம்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில், 1980களில் தருமபுரி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பிரச்சினை தீவிரமாகியபோதுஅங்கு துப்பாக்கியுடன் அனுப்பப்பட்டார் தேவாரம். நக்சலைட்டுக்கள் அட்டகாசத்தை ஒடுக்கி, அவர்களைஅடக்கினார் தேவாரம்.

இதேபோல, தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த விடுதலைப்புலிகள், தமிழகத்திற்கு எதிராக திரும்பி வன்முறையில்ஈடுபடத் தொடங்கியபோது அவர்களை அடக்கும் பணியும் தேவாரத்திற்குத் தரப்பட்டது. அதை வெற்றிகரமாகச்செய்து எம்.ஜி.ஆரின் பாராட்டைப் பெற்றார் தேவாரம்.

சந்தனக் கடத்தல் வீரப்பனின் லீலைகள் உச்சக்கட்டத்தை அடைந்தபோது அவனை அடக்குவதற்காக ஜெயலலிதாபல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அதிரடிப்படைத் தலைவராக எஸ்.பி. தமிழ்ச் செல்வன் நியமிக்கப்பட்டார்;பலனில்லை.

இந்த நிலையில்தான் தேவாரம் அதிரடிப்படைத் தலைவராக நியமிக்கப்பட்டார். மலைப் பகுதிகளில் பிறந்துவளர்ந்தவர் என்ற கூடுதல் தகுதியும், நக்சலைட்டுகள் பிரச்சினையைத் திறம்பட சமாளித்தவர் என்ற தகுதியும்தேவாரத்திற்கு இருந்தாலும், ஜெயலலிதாவுக்கு மிக நெருங்கிய நண்பர் என்ற கூடுதல் தகுதியும் இருந்ததால்அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்து களத்தில் இறக்கி விட்டார் ஜெயலலிதா.

1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வீரப்பனைத் தேடும் பணியில் இறங்கினார் தேவாரம். வீரப்பன் பதுங்கிஇருக்கும் மலைப் பகுதி குறித்து அலசி ஆராய்ந்த தேவாரம், வீரப்பனுக்கு மிகப் பெரிய பலமாக இருப்பது மலைஅல்லது மலைப் பகுதி கிராம மக்கள்தான் என்ற உண்மையை அறிந்தார். இதையடுத்து அப்பகுதி கிராம மக்களைமுற்றுகையிட்டு தகவல்கள் சேகரித்தார். அந்த நடவடிக்கைகளின்போது கிராம மக்கள் துன்புறுத்தப்பட்டார்கள்என்றும் கூட கூறப்படுவதுண்டு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X