For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரிக்கெட்: ஜிம்பாப்வே 2வது இன்னிங்ஸில் விளாசல்

By Staff
Google Oneindia Tamil News

பொலாவாயோ:

இந்திய- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடந்துவரும் முதல் டெஸ்ட்போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில், பிளவர் சகோதரர்களின் அதிரடி ஆட்டத்தால்ஜிம்பாப்வே அணி 303 ரன்கள் எடுக்க முடிந்தது.

3வது நாள் ஆட்டம் துவக்கத்திலேயே மர்பியின் விக்கெட்டை இழந்ததது ஜிம்பாப்வே.அவர் ஜாகீர்கான் வீசிய பந்தில் சிவ சுந்தர் தாசிடம் காட்ச் கொடுத்து அவுட் ஆனார்.அவர் 10 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 84.

மர்பி ஆட்டமிழந்தததும் ஆன்டிபிளவர் ஆட வந்தார். அவரும் கார்லிசிலும் இணைந்துசிறப்பாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 134ஆக இருந்த போது நெஹ்ரா வீசியபந்தில் வி.வி.எஸ்.லட்சுமணிடம் காட்ச் கொடுத்து கார்லிசில் ஆட்டமிழந்தார்.இவர் 52ரன்கள் எடுத்தார்.

இவர் அவுட்டானதையடுத்து ஆன்டி பிளவருடன் கிரான்ட் பிளவர் ஜோடி சேர்ந்தார்.இவர்கள் இருவரும் அணிக்கு வலு சேர்க்கும் வகைையில் சிறப்பாக ஆடினர்.

பொறுமையாக, அதே சமயம் அடிக்க வேண்டிய பந்தை அடித்து ரன்களைசேர்த்தனர்.அணியின் எண்ணிக்கை 234 ஆக இருந்த போது நெஹ்ரா வீசிய பந்தில்சடகோபன் ரமேஷிடம் காட்ச் கொடுத்து ஆன்டிபிளவர் ஆட்டமிழந்தார். இவர் 83ரன்கள் எடுத்தார். இவர் 7 பவுண்டரிகளையும் அடித்துள்ளார்.

இவர் சதம் அடிப்பார் என ஜிம்பாப்வே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால்இவர் சதமடிக்காதது அவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியது.

இவருடைய சகோதரர் கிராண்ட் பிளவரும் சிறப்பாக ஆடி 71 ரன்கள் எடுத்தார்.இவருடைய எண்ணிக்கையில் 5 பவுண்டரிகளும் அடங்கும்.

3வது நாள் ஆட்டநேர இறுதியில் ஜிம்பாப்வே 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள்எடுத்திருந்தது.

தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடந்த 4ஆவது நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வேஅனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 328 ரன்கள் எடுத்தது.

இந்தியாவின் ஸ்ரீநாத் 3 விக்கெட்டுகளையும், நேஹ்ரா மற்றும் ஜாகீர் கான்ஆகியோர்தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X