For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த தேர்தலில் 3வது அணி ஆட்சியமைக்கும்?

By Staff
Google Oneindia Tamil News

கரூர்:

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் என்ற கட்டாயம் இல்லை. எனவே, அடுத்ததேர்தலில் 3வது அணி கூ ட ஆட்சியைப் பிடிக்கும் என்று தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும் என்றுகூறினார் ப. சிதம்பரம்.

கரூரில் நடந்த தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் செயல் வீரர்கள் கூட்டத்தில் அதன் நிறுவனர்சிதம்பரம் மேலும் பேசியதாவது:

கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பல புதிய அனுபவங்களைப் பெற்றுள்ளோம். பிரச்சாரப் பயணத்தின்போது நகர்ப்புறங்களில் எட்டிய விழிப்புணர்வு கிராமப்புறங்களுக்கு எட்டவில்லை. திமுக மற்றும் பாஜக பெற்றுள்ள இடங்களைவைத்துப் பார்க்கும்போது கிராமப்புறங்களில் நமது பிரச்சாரம் போதவில்லை என்பது தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளோம்.

நகர்ப்புறங்களில் நமது பிரச்சாரத்திற்கு நல்ல பலன் இருந்தது. இதன் பலனாக நகர்ப்புறங்களில் மட்டுமே திமுக 22இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக வெற்றி பெற்றுள்ள 5 இடங்களில் 4 இடங்கள் நகர்ப்புறத்தில்தான்கிடைத்துள்ளது.

பிரச்சாரத்தின் தாக்கம் நகர்புறத்தில் அதிகம் இருந்தது. அதேசமயம் கிராமப் புறங்களைச் சென்றடைய போதுமானஅளவு கால அவகாசம் மிகவும் குறைவு. திமுக ஆட்சி நல்ல ஆட்சி, பொல்லாத ஆட்சி வரக் கூடாது என்பது கிராமப்புறங்களை எட்டவில்லை. இது நமக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்து விட்டது. நல்லாட்சி நடத்துவது மட்டுமல்ல,நல்லாட்சியைப் பற்றி எடுத்துக் கூற வேண்டும் என்பது தான் முக்கியமானதாக உள்ளது.

இனி வரும் 6 மாத காலத்திற்குள்ளாவது நாம் நடத்திய நல்லாட்சி பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லியாகவேண்டும். அப்போது தான் அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் நாம் கணிசமான இடங்களைப் பெற முடியும்.அடுத்த 5 ஆண்டுகள் என்பது கண்சிமிட்டும் நேரத்தில் முடிந்து விடும். 1825 நாட்களில் இப்போது 25 நிாட்கள்கழிந்து விட்டது. நமது பணிகளை இப்போதே துவங்கியாக வேண்டும்.

இளம் சிறுவர்களையும் நீங்கள் அலட்சியப்படுத்தி விடாதீர்கள். இப்போது 14, 15 வயது நிரம்பியுள்ள சிறுவர்கள்அடுத்த தேர்தலில் வாக்காளர்கள். லட்சியங்களை அடையும் வரை வாளையோ, வில்லையோ கீழே போட்டுவிடாதீர்கள்.

எந்த காங்கிரஸ் உண்மையான காங்கிரஸ் என்பது பற்றி நீங்கள் கவலைப் படவேண்டாம். அந்தப் பணியை மக்கள்பார்த்துக் கொள்வார்கள். கடந்த தேர்தலில் காட்டுமன்னார்கோயிலிலும், புரசைவாக்கத்திலும் தமாகாவை எதிர்த்துத்தான் போட்டியிட்டோம். நாம் பெற்றி பெறவில்லையா?

திமுக நில்லாட்சி தரவில்லை என யாரும் சொல்லிவிட முடியாது. நல்லாட்சியின் தேடல் பொதுமக்களிடையேஇருந்து வருகிறது. எனவே மாறுதல்களை மக்கள் விரும்புகின்றனர். எந்த விதிமுறையும் எல்லாக் காலத்திற்கும்செல்லும் எனச் சொல்ல முடியாது. எல்லாக் காலத்திற்கும் விதிமுறைகள் பொருந்தி விடாது.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் என்ற கட்டாயம் இல்லை. எனவே, அடுத்ததேர்தலில் 3வது அணி கூ ட ஆட்சியைப் பிடிக்கும் என்று தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும். தமிழகத்தின்தலைவிதியை மாற்ற முடியும் என்ற தன்னம்பிக்கை நமக்கு அவசியம்.

காங்கிரஸ் கட்சிகளில் பல பிளவுகள் தோன்றி விட்டது. தமாகா தலைவர்கள் பலர் கட்சியிலிருந்து ஜனநாயகப்பேரவைக்கு வருவார்கள் எனக் கூறுகின்றனர். இதனால் நானே அச்சமடைந்துள்ளேன். நமக்குத் தேவை சிறப்பாகசெயல்படும் தொண்டர்கள் மட்டுமே என்றார் ப.சிதம்பரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X