For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைமை தேர்தல் ஆணையாளனார் லிங்டோ

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக லிங்டோ புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமைைை தேர்தல் ஆணையராக இருந்த எம்.எஸ். கில் புதன்கிழமை ஓய்வு பெற்றார். இவர் கடந்த 5 ஆண்டுகளாகஇப்பொறுப்பில் இருந்து வந்தார்.

கில் ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக லிங்டோ புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

3 பேர் கொண்ட தேர்தல் கமிஷனில், கில் ஓய்வு பெற்றதால் 1 இடம் காலியாக இருந்தது. அந்த இடத்திற்கு 3வதுதேர்தல் ஆணையாளராக டாண்டன் நியமிக்கப்பட்டார். இவர் மத்தியப் பணியாளர் நலத்துறை செயலாளராக பதவிவகித்து வந்தார். இவரும் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

வடகிழக்கு மாநிலங்களிலிருந்து, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட முதல் நபர் லிங்டோ என்பதுகுறிப்பிடத்தக்கது. இவர் 3 ஆண்டுகளுக்கு தலைமை தேர்தல் ஆணையராகப் பதவி வகிப்பார்.

மேலும், இவர் 1997ம் ஆண்டு முதலே 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையராக இருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X