For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரிக்கெட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 237 ரன்னுக்கு ஆல் அவுட்

By Staff
Google Oneindia Tamil News

ஹராரே (ஜிம்பாப்வே):

இந்திய-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை துவங்கிய 2வது கிரிக்கெட் டெஸ்டில், இந்தியா237 ரன்களுக்கு தன்னுடைய முதல் இன்னிங்ஸை இழந்தது.

ராகுல் திராவிட் மட்டுமே அதிக அளவாக 68 ரன்களைச் சேர்த்திருந்தார்.

இந்த டெல்டில் வென்றால் டெஸ்ட் தொடரையே வெல்லலாம் என்ற நிலையில் இந்தியாவும், இந்த டெஸ்டில்வென்றால் டெஸ்ட் தொடரை சமன் செய்துவிடலாம் என்ற நிலையில் ஜிம்பாப்வேயும் களம் இறங்கின.

இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. துவக்க ஆட்டக்காரரான சடகோபன் ரமேஷுக்கு பதிலாகஹேமங் பதானியும், வேகப்பந்து வீச்சாளர்களில் ஜாகீர் கானுக்கு பதிலாக, அஜீத் அகார்கரும் இடம் பெற்றனர்.

டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக சிவசுந்தர் தாசும்,ஹேமங் பதானியும் களம் இறங்கினர். ஆனால் இந்திய அணியின் துவக்கம் உற்சாகம் அளிக்கும் விதமாகஅமையவில்லை.

அணியின் எண்ணிக்கை 7ஐ எட்டியபோதே பதானி அவுட் ஆகிவிட்டார். 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர்,வாடாம்பா வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

அடுத்து வி.வி.எஸ். லட்சுமண் விளையாட வந்தார். இந்தியாவில், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்றபோட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி இரட்டைச் சதமடித்து சாதனை புரிந்தவர் லட்சுமண்.

ஆனால், இப்போதோ அவர் 15 ரன்கள் எடுத்து, ஸ்ட்ரீக் வீசிய பந்தில் பிளிங்கநாட்டிடம் காட்ச் கொடுத்துஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 45 .

இந்நிலையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் தண்டுல்கர் களமிறங்கினார். சிறப்பாக ஆடிஇந்தியாவிற்கு வலு சேர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அவரும் நீண்டநேரம் விளையாடவில்லை.

இந்தியாவின் எண்ணிக்கை 90ஆக இருந்தபோது, ஸ்ட்ரீக் பந்தில் தண்டுல்கர் அவுட் ஆனார். அவர் 20 ரன்கள்மட்டுமே எடுத்திருந்தார்.

90 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், இந்தியாவின் 3 முன்னணி ஆட்டக்காரர்கள் ஆட்டக்காரர்கள் அவுட்ஆகியதால் இந்தியாவின் நிலையும் ஆட்டம் கண்டது.

துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார் தாஸ். தண்டுல்கர் அவுட் ஆனதும்அவருடன் ஜோடி சேர்ந்தார் அணித் தலைவர் சவுரவ் கங்குலி. அணியின் எண்ணிக்கை 104 என்ற நிலையில்,பிளிக்நாட் வீசிய பந்தில் ஆன்டி பிளவரிடம் காட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் தாஸ். அவர் 57ரன்கள் எடுத்தார்.

தாஸ் அவுட்ஆனவுடன், கங்குலியுடன் ஜோடி சேர்ந்தார் ராகுல் திராவிட். இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலிஇந்தியாவில், ஆஸ்திரேலியாவுடன் நடந்த ஆட்டத்தில் கங்குலி சரியாக விளையாடவில்லை. முதல் டெஸ்ட்போட்டியிலும் சரியாக விளையாடவில்லை.

இந்த முறையாவது அவர் சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்த்தனர். ஆனால் இம்முறையும் அவர்ஏமாற்றிவிட்டார். 32 பந்துகளை சந்தித்து 9 ரன்கள் மட்டுமே எடுத்து, ஸ்டிரீக் விசிய பந்தில் பிளிக்நாட்டிடம் காட்ச்கொடுத்து அவுட் ஆனார். அப்போது அணியின் எண்ணிக்கை 122.

கங்குலி ஆட்டமிழந்தவுடன் விக்கெட் கீப்பர் சமீர்தீகே விளையாட வந்தார். இந்த ஜோடியும் அதிக நேரம்நீடிக்கவில்லை.

சமீர்தீகே 20 ரன்கள் எடுத்திருந்தபோது பிரண்ட் வீசிய பந்துக்கு கிரான்ட் பிளாவரிடம் காட்ச் கொடுத்துஆட்டமிழந்தார். அப்போது அணயின் எண்ணிக்கை 165.

அடுத்து களமிறங்கியவர் அஜீத் அகார்கர். இவரும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, திராவிட்டுடன் ஜோடி சேர்ந்த ஹர்பஜன்சிங், ஜிம்பாப்வே பவுலர்களின் பந்துகளை விலாசஆரம்பித்தார். இவர்கள் இருவரும் ஓரளவு நிலைத்து நின்று ஆடியதால், இந்தியாவின் ஸ்கோர் கணிசமாக உயரஆரம்பித்தது. இந்த ஜோடி மட்டுமே அதிக அளவாக 56 ரன்களைச் சேர்த்திருந்தது. ஹர்பஜன் சிங் 42 பந்துகளில் 6பவுண்டரிகளுடன் 31 ரன்களைக் குவித்து, மர்பியின் பந்தில் கிளீன் போல்டு ஆனார்.

அடுத்து வந்தவர்களும் சோபிக்கவில்லை. அவர்கள் எடுத்த ரன்களும் "முட்டை"தான்.

ராகுல் திராவிட்தான் 68 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 8 பவுண்டரிகளை விளாசியதிராவிட், 115 பந்துகளைச் சந்தித்திருந்தார்.

ஜிம்பாப்வேயின் ஸ்ட்ரீக் அதிக அளவாக 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ப்ரெண்டும், மர்பியும் தலா 2விக்கெட்டுகளை வீழ்த்தினர். வடாம்பாவுக்கும் ப்ளிக்நாட்டுக்கும் தலா 1 விக்கெட் கிடைத்தது.

தொடர்ந்து, தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஜிம்பாப்வேயும் தள்ளாட ஆரம்பித்து விட்டது.

நேஹ்ரா வீசிய பந்தில் திராவிட்டிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்குத் திரும்பினார் துவக்க ஆட்டக்காரர்விட்டால். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை.

அடுத்து வந்த கார்லிஸ்லே, கேம்ப்பல் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து, பெவிலியனுக்குத்திரும்பிவிட்டனர்.

சற்று முன்னர் வரை, 7 ஓவர்களில், 3 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்திருந்தது. இந்த 3 விக்கெட்டுகளையும்நேஹ்ராவே வீழ்த்தியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X