For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சியில் பஸ் மீது விடுதலை சிறுத்தைகள் கல்வீச்சு

By Staff
Google Oneindia Tamil News

பெரம்பலூர்:

திருச்சி கைகளத்தூர் கிராமத்தில் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள்அமைப்பைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 8 பேரை தேடி வருகின்றனர்.

இது குறித்து திருச்சி மாவட்டம் போலீஸ் டி.ஐ.ஜி. சி.வி.ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், செவ்வாய்க்கிழமைஇரவு விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த 11 பேர் அய்யனார்பாளையம் அருகே வந்த பேருந்தை நிறுத்திபேருந்தில் ஏறினர்.

பேருந்து கைகளத்தூர் அருகே வந்ததும் அவர்கள் ஓட்டுனரை பேருந்தை நிறுத்துமாறு கூறி, விடுதலை சிறுத்தைகள்இயக்கத்திற்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாகவும்கோஷம் எழுப்பினர்.

அதன் பின் கல்வீசி பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். அவர்கள் நடத்துனர் கையிலிருந்தபையையும் பிடுங்கி அதிலிருந்த ரூ 3,000ஐ எடுத்துக் கொண்டனர். நடத்துனர் அணிந்திருந்த கை கடிகாரம், தங்கமாதிரம், தங்க சங்கிலி ஆகியவற்றையும் பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்மேலும் 8 பேரை தேடி வருகின்றனர்.

கடலூர்- பெரம்பலூர் எல்லை பகுதியில் கலவரம் ஏற்படக்கூடும் என்ற காரணத்தால் அங்கு பலத்த போலீஸ் காவல்போடப்பட்டுள்ளது என்றார்.

சிபிஐ விசாரணை கோருகிறார் திருமாவளவன்:

விடுதலை சிறுத்தைகளின் மாநில பொருளாளர் முதுகத்தான் பாண்டி கொல்லபட்டது தொடர்பாக சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி எல்லா மாவட்ட தலைநகரிலும் இந்த மாதம் 22ம் தேதி விடுதலைசிறுத்தைகள் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலை சிறுகத்தைகள் அமைப்பின் தலைவர்திருமாவளவன் தெரிவித்துள்ளார்,

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், பாண்டி கொலை செய்யப்பட்டதற்கு முன் விரோதம் காரணமல்ல.விடுதலை சிறுத்தைகள் அமைப்பை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அவர்கொல்லப்பட்டுள்ளார்.

பாண்டி குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ 2,00,000 கொடுக்கப்படவேண்டும். அரசாங்க வேலையும் வழங்கப்படவேண்டும்.

இந்த கொலையை செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு குண்டர்கள் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட வேண்டும்.எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இந்த மாதம் 22ம் தேதி எங்கள் அமைப்பின் சார்பில் தமிழகம்தமுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார். இந்நிலையில் பாண்டி கொலை தொடர்பாக போலீசார் 5 பேரை கைதுசெய்துள்ளனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X