For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓய்வு பெறுகிறார் ஐயா... தலைவராகிறார் சின்னய்யா

By Staff
Google Oneindia Tamil News

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஜி.கருப்பையா மூப்பனார் விரைவில் ஓய்வு பெறவுள்ளார்.

அவருக்குப் பதிலாக அவரது மகனும் கட்சியினரால் சின்னய்யா என ஐஸ் வைக்கப்பட்டு வருபவருமானஜி.கே.கோவிந்தவாசன் புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என்று த.மா.கா. வட்டாரத்தில் பேச்சுஅடிபடுகிறது.

மூப்பனார் நீண்ட நாட்களாக உடல் நலம் குன்றி இருந்து வருகிறார். அவரால் தீவிர அரசியல் நடவடிக்கைகளில்ஈடுபட முடியவில்லை. தேர்தல் பிரசாரத்தில் கூட அவர் முழுமையாக ஈடுபடவில்லை.

மூப்பனாருக்கு அடுத்த நிலையில் உள்ள எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், சோ. பாலகிருஷ்ணன், சுதர்சனம், ஜெயந்திநடராஜன் போன்ற சில தலைவர்களே கட்சியின் அன்றாட நடவடிக்கைகளை கவனித்து வருகிறார்கள்.

ஆனால், அவர்களுக்குள் பெரும் கோஷ்டிப் பூசல் நிலவி வருகிறது. இதன் காரணமாக கட்சியின் மூன்றாம் மட்டநிர்வாகிகள், இரண்டாம் கட்டத் தலைவர்களின் உத்தரவுகளை கண்டு கொள்வதில்லை. மேலும் இரண்டாம் கட்டத்தலைவர்கள் மீது பலவிதமான புகார்களும் வந்தவண்ணம் உள்ளன.

இந் நிலையில் இந்தக் குழப்பத்துக்கு முடிவு கட்டுவதற்காக புதிய தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்றகோரிக்கை சமீப காலமாக வலுத்துள்ளது. அதிலும் மூப்பனாரின் மகனான கோவிந்தவாசன் தான் புதியதலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று பெரும்பாலான தலைவர்கள் மூப்பனாரை வலியுறுத்தி வருகிறார்கள்.

மேலும், காங்கிரஸ் கட்சியுடன் த.மா.கா. இணையப் போகிறது என்ற பேச்சும் சமீபத்தில் வலுத்து வருகிறது. ஆனால்இதற்கு த.மா.கா. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

கட்சியின் உள்ள முக்கியத் தலைவர்கள் மீதும் தொண்டர்களுக்கு அதிருப்தி தான்.

இந்த அதிருப்தியாளர்களில் முதன்மையானவர் கோவிந்தவாசன். எனவே இந்த பிரச்சனைக்கு முற்றுப் புள்ளிவைக்க கோவிந்தவாசனயை தலைவராக்குவதுதான் ஒரே வழி என்று மூப்பனாரிடம் யோசனைதெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த த.மா.கா. எம்.எல்.ஏ. ஹக்கீம்தான் இந்த யோசனையை முதலில் சொன்னவர். அவரைத்தொடர்ந்து பல மாவட்டங்களைச் சேர்ந்த த.மா.கா. நிர்வாகிகளும் இது தொடர்பாக தங்களது மாவட்ட அளவில்தீர்மானங்கள் நிறைவேற்றி மூப்பனாருக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து கோவிந்தவாசனுக்கு ஆதரவாக பிற தலைவர்களும் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.

இந் நிலையில் தான் கட்சியின் அனைத்து அமைப்புகளையும் கலைத்து ஆணையிட்டார் மூப்பனார். இதனால்,மூப்பனார் மட்டும் தலைவர் பதவியில் இருந்து வருகிறார். கட்சியில் வேறு யாருக்கும் எந்தப் பதவியும் இல்லை.கட்சியில் நிர்வாகிகளே தற்போது இல்லை.

புதிய நிர்வாகிகள் தேர்வு அனேகமாக ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நிர்வாகிகள் நியமனத்தின்போது தலைவராக கோவிந்தவாசன் தேர்வு செய்யப்படவுள்ளர் என்று த.மா.காவில்பலத்த பேச்சு அடிபடுகிறது. மேலும், மூப்பனார் தலைமை மீது அவநம்பிக்கையுடன் சில தலைவர்களுக்கு ஆப்புஅடிக்கப்படும் என்றும் தெரிகிறது. இவர்களில் முதன்மையானவர்களாக ஹிட் லிஸ்டில் இருப்பவர்கள் ஜெயந்திநடராஜன், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர்.

ஜெயந்தி நடராஜன் தனக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி பதவி கிடைக்காது என்ற எண்ணத்தில் த.மா.காவில்ஆணாதிக்கம் அதிகமாகி விட்டதாக பேசியுள்ளார். இதனால் மூப்பனார், ஜெயந்தி மீது அதிருப்தியாக உள்ளார்.

அதுபோல, தனுஷ்கோடி ஆதித்தன் மீது தூத்துக்குடி மாவட்ட த.மா.காவினர் லாரி, லாரியாக புகார்களைக்கொடுத்துள்ளனர். மத்திய அமைச்சர், எம்.பி. என பல பதவிகளை வகித்த இந்த நபர் தென் தமிழகத்தின் பல கோடிமதிப்புள்ள அரசு சொத்துக்களை அபகரித்துள்ளார்.

இதற்காக கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்துக் கட்சி பிராடுகளுடனும் சேர்ந்து பணத்தை சுருட்டியுள்ளார்.இவரது சொத்துக் குவிப்பு குறித்து மூக்கில் விரல் வைக்காத ஆட்களே இல்லை. இவரை வைத்துக் கொண்டு தூயஆட்சி, காமராஜர் ஆட்சி என மூப்பனார் பேசினால் பொது மக்கள் சிரிப்பார்கள் என த.மா.காவினரேகூறுகின்றனர். அந்த அளவுக்கு பொது சொத்தை சுருட்டியிருக்கிறார் இவர்,

அவரை நீக்காவிட்டால் கட்சி பிளவு படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே இந்த இருவர் மீதும்நடவடிக்கை நிச்சயம் என்று தெரிகிறது.

த.மா.காவில் புதிய தலைவர் வருவதும், கட்சி புதுப் பொலிவு பெறுவதும் எப்படியும் ஜூலை 15-ம் தேதிக்குள்நடந்து விடும் என்று கட்சி வட்டாரத்தில் உறுதியான பேச்சு நிலவுகிறது.

எப்படியோ, சைக்கிள் ஒழுங்காக ஓடினால் சரி...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X