For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூர்தர்ஷனில் கல்வி ஒளிபரப்புக்கு "குட்-பை"

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தூர்தர்ஷனில் இனி கல்வி ஒளிபரப்பு கிடையாது என்று கூறப்படுகிறது.

கல்வி ஒளிபரப்புகளைப் பார்ப்பதற்கு இப்போது ஆட்களே இல்லை என்பதால், இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு மூடுவிழாவை (?)நடத்துவது பற்றி தூர்தர்ஷன் முடிவெடுத்துவிட்டது.

வரும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் ஒளிபரப்புவதற்காக எந்த கல்வி நிகழ்ச்சியும் இல்லை என்று கூறுகிறார் ஒரு தூர்தர்ஷன் அதிகாரி.

தூர்தர்ஷனில் முழுக்க முழுக்க கல்வி நிகழ்ச்சிகளையே ஒளிபரப்பிக் கொண்டு வரும் "ஞான் தர்ஷன் சேனல் கூட விரைவில்மூடப்படவுள்ளது. நாடு முழுவதும், 20 சதவிகித கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள்தான் இந்தச் சேனலுக்கு கனெக்ஷன்கொடுத்திருக்கிறார்களாம்.

புற்றீசல் போல் பெருக்கெடுத்து வரும் சாட்டிலைட் சேனல்களுக்கும், அவற்றில் வரும் நூற்றுக்கணக்கான பொழுதுபோக்குநிகழ்ச்சிகளுக்கும் இடையே, இத்தகைய கல்வி நிகழ்ச்சிகள் எடுபடாமல் போனது வாஸ்தவம்தான்.

யுஜிசி, இக்னவ் போன்ற கல்வி நிறுவனங்கள் மட்டும்தான், இத்தகைய கல்வி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு வாய்ப்புகளைக்கொடுத்துக் கொண்டிருந்தன. தற்போது அவையும் ஊசலாட ஆரம்பித்து விட்டன.

மேலும், கிட்டத்தட்ட அனைத்து டி.வி. நிகழ்ச்சிகளும் தற்போது விளம்பரங்களின் வாயிலாக, அதாவது ஸ்பான்ஸர்ஷிப்மூலமாகத்தான் உயிருடன் உலவி வருகின்றன. மக்களும் ஸ்பான்ஸர்ஷிப் இல்லாத நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்களா என்பதும்கேள்விக்குறிதான்!

இந்நிலையில், கல்வி ஒளிபரப்புகளுக்கு யாரும் ஸ்பான்ஸர்ஷிப் தர மாட்டார்களா என்று தூர்தர்ஷன் ஏங்குவதில் நியாயம்இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இப்படிக் கேட்கும் போதுதான் மக்கள் தரத்தைப் பற்றிப் பேச ஆரம்பிப்பார்கள். கல்வி என்றுசொல்லும் போதே, தரத்தை எதிர்பார்ப்பது இயல்புதானே?

பெரும்பாலும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி வரும் கல்வி நிகழ்ச்சிகளைப் பார்த்து, "ஒரே போர்" என்று சொல்லாத மக்கள் அரிதிலும்அரிதுதான். "அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைப்பது" போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்தால் யாருக்குத்தான்போரடிக்காது? குறிப்பிட்ட கல்வி ஒளிபரப்பில் பங்கு கொண்டவர்கூட, அந்த நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்திருப்பாரா என்பது கூடசந்தேகம்தான்.

இப்படி இருக்கும் கல்வி நிகழ்ச்சிகளுக்கு யார்தான் முன்வந்து ஸ்பான்ஸர்ஷிப் கொடுப்பார்கள்? தரத்தையும் உற்சாகமூட்டும்அம்சங்களையும் ஒருசேரக் கலந்து அருமையான நிகழ்ச்சிகளைத் தந்தால், எந்த ஸ்பாஸ்ர்ஸ்தான் அந்த கல்வி நிகழ்ச்சியைஒளிபரப்ப முன்வர மாட்டார்கள்?

உலகப் புகழ்பெற்ற "டிஸ்கவரி", "நேஷனல் ஜியாக்ரபி" சேனல்களை தூர்தர்ஷன் அதிகாரிகளும், யுஜிசி-இக்னவ் கல்விநிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பார்த்திருப்பார்கள். அவற்றின் தரத்தையும், தூர்தர்ஷன் கல்வித் தரத்தையும் ஒப்பிட்டால் என்னஆகும்? ஆனால், அவற்றின் தரத்திற்குத்தான் அவ்வளவு ஸ்பான்ஸர்ஷிப் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நம்மவர்கள்மறுக்கவே முடியாது.

தூர்தர்ஷனில் கல்வி ஒளிபரப்பை நிறுத்த வேண்டாம் என்று சிலர் கூக்குரல் எழுப்பித்தான் வருகிறார்கள். அவர்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். முக்கியமாக, மனிதவள மேம்பாட்டுத் துறை தற்போது கொஞ்சம் போராடித்தான் வருகிறது. "கல்விநிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது பிரச்சார் பாரதியின் கடமை" என்று கூறி, அது தூர்தர்ஷனைக் "கூல்" செய்து வருகிறது.

ஆனாலும், ஸ்பான்ஸர்ஷிப் இல்லாத பட்சத்தில் நிச்சயம் கல்வி ஒளிபரப்புகளுக்க நிச்சயம் மூடுவிழா உண்டு என்று அதிகாரிகள்தலையில் அடிக்காத குறையாக சத்தியம் செய்து வருகிறார்கள்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X