For Daily Alerts
Just In
சன் டி.வி. ஒளிபரப்பைத் தடுக்க போலீஸார் முயற்சி?
சென்னை:
கருணாநிதி கைதைத் தொடர்ந்து, சன் டி.வி. ஒளிபரப்பை முடக்குவதற்கு போலீஸார் முயற்சி செய்வதாகக்கூறப்படுகிறது.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கைது வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் கைதுசெய்யப்பட்டார். போலீஸார் அவரை அடித்து, இழுத்துச் சென்றனர்.
அவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திலிருந்தே, இது பற்றி சன் டி.வி. ஒளிபரப்பி வந்தது. கருணாநிதி கைது பற்றி,டெலிபோன் மூலம் மக்கள் கருத்துக்களையும் நேரடியாக சன் டி.வி. ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.
இதனால், சன் டி.வி. ஒளிபரப்புவதைத் தடுத்து நிறுத்துவதற்கு போலீஸார் முயற்சி செய்து வருவதாகக்கூறப்படுகிறது.
அங்கு பெரும் அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பல இடங்களில் மின்சாரமும் தடைசெய்யப்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, June 30, 2001, 5:30 [IST]