For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக பணிந்தது: மாறன், பாலு விரைவில் விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

என்னைக் கைது செய்தபோது..

1996 ம் ஆண்டு போலீஸார் என்னைக் கைது செய்ய வந்த போது, நான் எந்தவொரு அசம்பாவிதச் சம்பவத்தையும்உருவாக்கவில்லை. என் வீட்டுக்கு வந்த போலீஸார் மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.

அவர்கள் நான் பூஜை முடிக்கும்வரை காத்திருந்தனர். அவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்தேன்.

பின்னர் போலீஸ் ஜீப்பில் ஏறிச் சென்றேன். காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நான் 2 மணி நேரம் விசாரிக்கப்பட்டேன்.என்னுடன் வழக்கறிஞர் வரக்கூட அனுமதிக்கப்படவில்லை.

சன் டிவி நாடகம்:

சன் டிவியில் காட்டப்படுவது திட்டமிட்ட நாடகமாகும். கருணாநிதியைப் போலீஸார் அழைத்துச் செல்லும்போதுவேண்டுமென்றே மாறன் கருணாநிதியைக் கீழே தள்ளிவிட்டார்.

கருணாநிதி கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டபோது கொலை பண்ணாதீங்க என்ற ஒரு பின்னணிக் குரல் ஒலிக்கிறது.இந்தக் குரல் உண்மையிலேயே கருணாநிதியின் குரல் அல்ல. க்ளோசப்பில் பார்க்கும்போது கருணாநிதியின் வாய்அசையவேயில்லை என்பது தெரியும்.

முரசொலி மாறனும், அவரது குடும்பத்தாரும் வேண்டுமென்ற திட்டமிட்டு நாடகமாடுகின்றனர். அவர்கள் காவல்துறையினரைமிகவும் கீழ்த்தரமான கெட்டவார்த்தையால் திட்டியுள்ளனர்.

356 வது பிரிவு:

தமிழகம் முழுவதும் அமைதியாக உள்ளது. இந்நிலையில் வேண்டுமென்றே திமுகவினர் வன்முறையைத் தூண்டி விடுகின்றனர்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 356 வது பிரிவைப் பயன்படுத்தி தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்தவிருப்பதாகவும்,அதற்காக வாஜ்பாய் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டவிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

தமிழக அரசை கலைக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லே. சட்டத்துக்குப் புறம்பாக தமிழக அரசு நடந்து கொண்டால்மட்டுமே தமிழக அரசை 356 வது பிரிவைப் பயன்படுத்திக் கலைக்க முடியும்.

கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் கைது செய்யப்பட்டதால் தமிழகத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சிலகல்வீச்சுச் சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளன.

மாறனை நீக்க வேண்டும்:

ஒரு குற்றவாளியைப் போலீஸார் கைது செய்து அழைத்துச் செல்லும்போது அவர்களுடன் அவர்களது உறவினர்கள் யாரும்செல்லக் கூடாது. ஆனால் மாறன், கருணாநிதியுடன் சென்றார்.

காவல்துறையினரைத் தங்கள் கடமையைச் செய்ய விடாமல் மாறனும், டி.ஆர்.பாலுவும் நடந்து கொண்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் காவல்துறையினரை தரங்கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இவர்களது செயல்களை பிரதமர்ஏற்கிறாரா?

மத்திய அமைச்சர்கள் இருவரும் காவல்துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன. இந்தஇரு அமைச்சர்களையும் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ஆகியோர் நடந்த உண்மைதெரியாமல் கண்டன அறிக்கைகள் வெளியிட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X