For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீர்வுதான் என்ன?

By Staff
Google Oneindia Tamil News

C.A.Srinivasanதெலுங்கு கங்கைத் திட்டம் உருவானதற்கு முன்பே உருவெடுத்த ஒரு திட்டம்தான் சென்னைக் கால்வாய் திட்டம். மிகச் சிறந்ததிட்டமாகவும், சிக்கனமான திட்டமாகவும் கருதப்பட்ட இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதுதுரதிர்ஷ்டவசமானது தான்.

1983ல் இந்தத் திட்டத்தை செயல்படுத்தியிருந்தால் ரூ. 210 கோடியுடன் முடிந்திருக்கும். ஆனால் இப்போது இத்திட்டத்தைநிறைவேற்ற ரூ. 900 கோடி செலவாகும். இருப்பினும் பிற திட்டங்களை விட சிறந்த திட்டமாக இன்றளவும் இது இருக்கிறது.

மிகச் சுலபமான இத் திட்டத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் திட்டத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான பொதுப்பணித்துறையின் ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் சி.ஏ.சீனிவாசன் குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான சி.ஏ.சீனிவாசன் பி.இ.ஹானர்ஸ் முடித்தவர். பொதுப் பணித்துறைக்கு வருவதற்கு முன்மெட்ராஸ் மெட்ரோபாலிடன் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனராக இருந்தார்.

பொதுப் பணித்துறையில் பொது, நீர்ப்பாசனம் மற்றும் நிலத்தடி நீர் ஆகிய பிரிவுகளில் தலைமைப் பொறியாளராக 10ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.

ஆசிய வளர்ச்சி வங்கியின் பொறியியல் ஆலோசகராக, பிலிப்பைன்ஸில் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ஆலோசகர் மற்றும்ஆய்வுக் குழுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

ஐரோப்பா மற்றும் பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

மத்திய நீர் மற்றும் மின்சார கமிஷனின் துணைத் தலைவராக 4 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

1983-ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின்னும் பல தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்துவருகிறார்.

இனி சென்னைக் கால்வாய் திட்டம் ....

Tamil Nadu Mapசென்னையைப் பொருத்தவரை பூண்டி, செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழாவரம் ஆகிய 4 ஏரிகளிலிருந்துதான் குடிநீர்எடுக்கப்படுகிறது. சென்னைக் கால்வாய் திட்டத்தின் மூலம் காவிரியிலிருந்து எடுக்கப்படும். இந்த நீர் நேரடியாகதிறந்தவெளிக் கால்வாய்கள் மூலம் மேலே சொன்ன 4 ஏரிகளுக்கும் கொண்டு வரப்படும்.

ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் என்ற இடத்திலிருந்து காவிரியில் நீர் எடுக்கப்படுகிறது. அங்கிருந்து கால்வாய்மூலம் முதலில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு காவிரி நீர் கொண்டு வரப்படும். மொத்தம் வினாடிக்கு 1000 கன அடி காவிரி நீர்இக்கால்வாய் மூலம் கொண்டு வரப்படும்.

இந்தத் தண்ணீரை தானாகவே இழுவிசை காரணமாக வரும். எந்தவிதமான பம்பிங் தேவையும் கிடையாது என்பதுஇத்திட்டத்தின் முக்கிய அம்சம்.

பள்ளிப்பாளையத்தில் காவிரி ஆற்றங்கரையின் இடது கரையில் கால்வாயின் தலைப் பகுதி அமையும். தற்போது காவிரி ஆற்றின்குறுக்கே 4 சிறு மதகுகள் உள்ளன. மின் உற்பத்திக்காக இவை அமைக்கப்பட்டன. மேலும் 3 மதகுகள் (பவானி 1, 2, 3)ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.

இந்த மதகுகளில் ஒன்றை பயன்படுத்தியே காவிரியிலிருந்து ஆண்டுதோறும் 15 டி.எம்.சி. நீரை எடுத்து சென்னைக் கால்வாய்திட்டத்திற்குத் திருப்பி விட முடியும். புதிதாக எந்தவிதமான மதகுகளும் கட்டத் தேவையில்லை. ஒரே ஒரு முதன்மை மதகுமட்டுமே கட்டப்பட வேண்டும்.

சிமெண்ட் கரைகளால் அமைக்கப்பட்ட கால்வாய் கட்டப்பட வேண்டும். இதன் மூலம் வினாடிக்கு 1000 கன அடி நீர் செல்லும்.கால்வாயின் மொத்த தூரம் 500 கிலோமீட்டர். பள்ளிப்பாளையத்திலிருந்து இந்த கால்வாய் செம்பரம்பாக்கம் ஏரி வரைசெல்லும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X