For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகப் போலீசாருக்கு சன் டி.வி. கண்டனம்

By Super
Google Oneindia Tamil News

19ம் தேதி வாஜ்பாய் பேசினார். ஜம்மூ-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. இதில் பேச்சுவார்த்தைக்கே அவசியமில்லை என்றார். ஆனால், காஷ்மீர்பிரச்சனைக்கு உரிய பகுதி என்று மீண்டும் சொன்னது பாகிஸ்தான்.

பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஆதரவும் வாஜ்பாய்க்கு கிடைத்தது. நாங்களும் பேச்சுவார்த்தையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்என ஹூரியத் கோரியது. இதை இந்தியா ஏற்க மறுத்தது. ஹூரியத்தின் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டது.

டெல்லியில் உள்ள தனது மூதாதையர்களின் வீட்டுக்கு முஷாரப் செல்ல ஆசைப்படுவதாக தகவல் வர, அங்கிருந்த தகர டின்கள், குப்பைக் கூழங்கள்அகற்றும் பணி தொடங்கியது. அந்தப் பகுதிக்கு முதல்முறையாக சாலையும் போடப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின் அந்த வீட்டுக்கு வெள்ளை அடிக்கவும்முயற்சி எடுக்கப்பட்டது.

பாகிஸ்தானில் உள்ள 24 கட்சிகளை அழைத்து தனது இந்தியப் பயணம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் முஷாரப். ஆனால், இதை முன்னாள் பிரதமர்கள்நவாஸ் ஷெரீப், பெனாசிர் புட்டோ ஆகியோரின் கட்சிகள் புறக்கணித்தன காஷ்மீர் குறித்து பேச வேண்டும் என தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன்கோரிக்கை விடுத்தது.

ஆக்ரா வரும் வாஜ்பாய், முஷாரபை தங்க வைக்க அங்குள்ள 3 நட்சத்திர ஹோட்டஸ்களுக்கு இடையே போட்டு ஆரம்பம் ஆனது. ஹோட்டல்கள்அலங்கரிக்கப்பட்டன.

சிம்லா ஒப்பந்தம், வாஜ்பாயின் லாகூர் பயணத்தின்போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் முஷாரபுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும்என வெளியுறவுத்துறை அறிவித்தது.

சியாச்சினில் உள்ள இரு தரப்புப் படைகளையும் வாபஸ் பெற இந்தியாவுடன் ரகசிய உடன்படிக்கை ஏதும் செய்யப்படாது என முஷாரப் அறிவித்தார். பாகிஸ்தான்சிறையில் உள்ள இந்திய அமைதித் தூதர் விகாஸ் சிங்கை விடுவிப்பதாக அறிவித்தார்.

இந்தியா வரும்போது ஹூரியத் தலைவர்களை சந்திக்க பர்வேஸ் ஆர்வம் தெரிவித்தார். ஆனால், இதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து ஹூரியத்தலைவர்கள் அவரசக் கூட்டம் நடத்தி விவகாரம் குறித்து ஆலோசித்தனர்.

இதையடுத்து இந்தியா வரும் தன்னை சந்திக்கும்படி ஹூரியத் தலைவர்களுக்கு முஷாரப் கடிதம் அனுப்பினார்.

இந்தியா வரும் பாகிஸ்தான் பிரஜைகளுக்கு எளிதில் விசா கிடைக்க வசதியாக எல்லைப் பகுதியிலேயே கவுண்டர்கள் அமைப்பதாக இந்தியா அறிவித்தது.

முஷாரபை தனியே சந்தித்துப் பேச விரும்புவதாக ஹூரியத் அமைப்பு கோரியது.

பாகிஸ்தான் தூதரகத்தில் இந்தியாவின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுக்கும் டீ பார்ட்டி தருவதாக முஷாரப் அறிவித்தார். அந்த பார்ட்டிக்கு ஹூரியத்அமைப்புக்கும் அழைப்பு விடுத்தார். இதையடுத்து இந்த டீ பார்டியில் கலந்து கொள்ள மாட்டோம் என தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் அறிவித்தன.

பேச்சுவார்த்தையே ஒரு மோசடி தான் என பல தீவிரவாத அமைப்புகளும் அறிவித்தன.

இந்தச் சூழ்நிலையில் தான் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X