பாகிஸ்தானின் டீ பார்ட்டி: இந்தியா புறக்கணிப்பு
டெல்லி:
பாகிஸ்தான் தூதர் வழங்கிய டீ பார்ட்டியை இந்திய அரசும், அரசியல் கட்சிகளும் புறக்கணித்தன.
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு பாகிஸ்தான் தூதர் ஜகாங்கீர் குவாசி சனிக்கிழமைமாலை டீ பார்ட்டி அளித்தார்.
காஷ்மீருக்கு சுதந்திரம் கோரும் ஹூரியத் அமைப்புக்கும் இந்த டீ பார்ட்டியில் கலந்து கொள்ள அழைப்புவிடுக்கப்பட்டதையடுத்து இந்தக் கூட்டத்தை இந்திய அரசு மறைமுகமாகப் புறக்கணித்தது.
இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஹூரியத் எந்த இடத்திலும் நுழையக் கூடாது என இந்தியா தெளிவாகபாகிஸ்தானிடம கூறிவிட்டது. ஆனால், ஹூரியத்தை டீ பார்ட்டிக்கு அழைப்பதாக பாகிஸ்தான் கூற, அந்த டீபார்ட்டியையே புறக்கணித்துவிட இந்தியா முடிவு செய்தது.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சிகள் கூட்டத்தில் கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியின்அமைச்சர்களும், தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியும் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்தது.
இதையடுத்து சனிக்கிழமை மாலையில் பாகிஸ்தான் தூதரகமான பாகிஸ்தான் ஹவுசில் தூதர் ஜகான்கூர் குவாசிஅளித்த டீ பார்ட்டியில் மூத்த இந்திய அமைச்சர் யாரும் கலந்து கொள்ளவில்லை.
வெளியுறவுத்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரியை மட்டும் அனுப்பி விட்டு அமைதியாக இருந்துவிட்டது இந்தியா.
காங்கிரஸ் சார்பிலும் யாரும் கலந்து கொள்ளவில்லை.
முன்னதாக இந்தியாவைச் சேர்ந்த மூத்த ஆலோசகர்கள், அறிவுஜீவிகளுடனும் பர்வேஸ் முஷாரப் ஆலோசனைநடத்தினார்.
அப்போது, காஷ்மீர் பிரச்சனையில் வாஜ்பாயின் பிரச்சனைகளை நான் புரிந்து கொள்கிறேன். அதே போலஎன்னுடைய பிரச்சனைகளையும் இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். இந்த 3 நாள் பயணத்திலேயே காஷீமீர்தொடர்பாக முக்கியமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.