For Daily Alerts
Just In
வாஜ்பாயை பாகிஸ்தானுக்கு அழைக்கிறார் பர்வேஸ்
டெல்லி:
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப், பிரதமர் வாஜ்பாயை பாகிஸ்தான் வருமாறு அழைப்புவிடுக்கவுள்ளார்.
இத்தகவலை பாகிஸ்தானின் வெளியுறவுத்துறைச் செயலாளர் இனாமுல் ஹக் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்காக இந்தியா வருமாறு வாஜ்பாய் விடுத்த அழைப்பை ஏற்றுத் தான் பர்வேஸ் டெல்லி வந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், பாகிஸ்தானின் அழைப்பை வாஜ்பாய் ஏற்பார் என்றே தெரிகிறது.