For Daily Alerts
Just In
ஆக்ராவில் வாஜ்பாய், முஷாரப்
ஆக்ரா:
அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபும்தாஜ்மகால் நகரான ஆக்ரா வந்து சேர்ந்தனர்.
வாஜ்பாய், வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், பிரதமரின் முதன்மைஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா ஆகியோர் சிறப்பு விமானம் மூலம் சனிக்கிழமை நள்ளிரவில் ஆக்ரா வந்துசேர்ந்தனர்.
பாகிஸ்தான் அதிபர் தனது மனைவி ஷெபாவுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.45 மணிக்கு சிறப்புபோயிங் விமானத்தில் ஆக்ரா வந்தார். அவரது விமானம் இந்திய விமானப் படைத் தளத்தில் தரையிறக்கப்பட்டது.