For Daily Alerts
Just In
மாலையில் 4வது முறையாக வாஜ்பாய்-முஷாரப் சந்திப்பு
ஆக்ரா:
திங்கள்கிழமை காலை தொடங்கிய பிரதமர் வாஜ்பாய், அதிபர் முஷாரப் இடையிலான 3வது சுற்றுப்பேச்சுவார்த்தை முடிவடைந்தது.
இருவரும் மாலைக்குள் 4வது முறையாக தனியே சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளனர்.
அதன் பின்னர் தான் அவர் ஆஜ்மீர் சென்றுவிட்டு அங்கிருந்து பாகிஸ்தான் திரும்புவார் எனத் தெரிகிறது.
பாகிஸ்தான் திரும்பும் முன் இரு தலைவர்களும் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிடுவர். இருவரும் சேர்ந்துநிருபர்களையும் சந்திப்பர் என்றும் கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக நடந்து வருவதால் சிறிது நேரம் கூடுதலாகவே தங்கியிருந்து முழுமையாகப்பேச முஷாரப் திட்டமிட்டுள்ளார். இதனால் அவர் பாகிஸ்தான் திரும்புவது தாமதமாகும் என்றும் கூறப்படுகிறது.